செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் ஆடைகளை இப்படி அணிந்து தான் பாருங்கள் பெண்களே

ஆடைகளை இப்படி அணிந்து தான் பாருங்கள் பெண்களே

1 minutes read

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும்.

என்ன மாதிரி­யான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள்.

வீட்டில் அணிய வேண்டிய ஆடை­களை வெளியிலேயேயும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதாரண­மாக­வும் உடுத்திச் செல்வார்கள்.

ஆடை அணிய சில டிப்ஸ்
தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால், சாதாரண கொட்டன் துணி­களை உடுத்தினால்கூட நேர்த்தியாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது அழகாக தெரியும்.


எனவே, பெஷன் என்ற பெயரில் கண்டதையும் உடுத்தாமல் நமக்கு வசதியான ஆடைகளை அணிவதே நம் அழகை அதிகரித்துக் காட்டும்.

சீசனுக்கு ஏற்ற ஆடைகள்
ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதை­யும் மகிழ்ச்சிப்­படுத்­தும்.


கோடை­யில் கொட்டன் ஆடைகள் அணி­வது உடலையும் உள்­ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

ஆடைகளின் நிறம்

ஆடைகளின் வண்ணங்கள் மென்மை கலந்ததாக இருப்பது நல்லது.கறுப்பு, சிவப்பு மற்றும் “பளிச்’ வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும்.

இதனால், உட­லின் நீர்ச்­சத்து குறைந்துவிடும். எனவே, கோடை­யில் உடலை இறுக்­காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வெள்ளிக்கிழமை உடை
வெள்ளிக்கிழமை என்றாலே ஸ்பெசல்­தான். பெண்கள் என்றால் பட்டு வகைய­றாக்­களில் தான் அலு­வலகத்­திற்கு கூட செல்வார்கள்.

வெள்­ளிக்­கிழமையன்று வெள்ளை நிற ஆடை­யில் செல்வது பாந்த­மாக இருக்கும் எ­ன்கின்­றனர் நிபுணர்கள்.பணி­யிடங்களுக்கு ஜீன்ஸ் ஆடை ஏற்றதல்ல என்பதே நிபுணர்­களின் அறிவுரை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.