Wednesday, December 1, 2021

இதையும் படிங்க

சரும பராமரிப்புக்கு உருளைக்கிழங்கை பயன்படுத்துவது எப்படி?

உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.

குழந்தைகளின் தவறுகளை சுட்டிக் காட்டி பெரிது படுத்தாதீர்கள்

படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். சற்று நேரம் டி.வி பார்த்தால்...

குழந்தைகளின் சேமிக்கும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி?

குழந்தையின் பிறந்த நாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப்...

பெண்கள் பற்றிய சுவாரசியமான உளவியல் உண்மைகள்

பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள்.

மாறி வரும் பருவ நிலையும், குழந்தைகளுக்கு வரும் நோய்களும்…

குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது.

நீங்கள் உடைத்தெறிய வேண்டிய பழக்கங்கள்..

பெண்கள் உடைத்தெறிய வேண்டிய சில பழக்கங்கள், செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த கட்டுரை வாயிலாக அதை தெரிந்து கொள்வோம். ...

ஆசிரியர்

ரெட் கலர் லிப்ஸ்டிக்கை இப்படியெல்லாம் கூட யூஸ் பண்ணலாமா?

பெண்களாக பிறந்த அனைவருக்குமே லிப்ஸ்டிக் என்பது பிடிக்க தான் செய்யும். லிப்ஸ்டிக்கில் எத்தனையோ நிறங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்திலுமே சற்று கம்பீரமாக, அழகாக, தனித்துவமாக தெரியும் நிறம் என்றால் சிவப்பு நிற லிப்ஸ்டிக் தான். பார்ட்டி ஆகட்டும், ஆஃபீஸ் மீட்டிங் ஆகட்டும், கோயில் விஷேசம் என அனைத்து விதமான உடை அலங்காரத்திற்கும் மேட்சிங் ஆக இருப்பது சிவப்பு நிற லிப்ஸ்டிக். உடைக்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸடிக் இல்லாவிட்டால் கூட, சிவப்பு நிறம் போட்டால் வித்தியாசம் எதுவும் தெரியாது.

சரி இந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை உதட்டில் போடுவதற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியாமா என்ன? இந்த கேள்விக்கு இல்லை என்பதே பதில். பலருக்கு லிப்ஸ்டிக்கை வேறு எப்படியெல்லாம் உபயோக்கிலாம் என்ற யுக்தி தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்காகவே இந்த கட்டுரை பதிவிடப்படுகிறது. போகும் எல்லா இடங்களுக்கும் எல்லா மேக்கப் பொருட்களையும் எடுத்து செல்ல முடியாது அல்லவா? அந்த மாதிரியான தருணங்களில் இந்த யுக்திகளை தாராளமாக கையாளலாம். கையில் ஒரே ஒரு சிவப்பு நிற லிப்ஸ்டிக் இருந்தால் போதுமானது. வாருங்கள், இந்த மேக்கப் யுக்திகளை நாமும் தெரிந்து கொள்வோம்…

கன்சீலர்
கன்சீலர் என்றாலே, முகத்தில் ஆங்காங்கே உள்ள சிறு சிறு பருக்கள் மற்றும் கருமைகளை மறைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், லிப்ஸ்டிக்கை கூட ஒரு கன்சீலராக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு, முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் லிப்ஸ்டிக்கை தடவி மறைக்க வேண்டும். மிகவும் லேசாக தடவினால் போதும். அதிகமாக தடவி விடாதீர்கள். லிப்ஸ்டிப் அதிகமாக தடவி விட்டால் கன்சீலர் கொண்டு அதை மறைப்பது கடினமாகிவிடும். லிப்ஸ்டிக் தடவிய பின்னர், அதன் மீது இப்போது சரும நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் கன்சீலரை தேய்க்கவும். இந்த முறையில் லிப்ஸ்டிக் தடவி மேக்கப் போட்டு பாருங்கள் பின்னர் தெரியும்.

லிப் பாம்
உங்களது சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை லிப் பாமாக கூட மாற்றலாம். சிவப்பு நிற லிப்ஸ்டிக் உபயோகித்து சலிப்படைந்துவிட்டால், அதனை பயன்படுத்தி ஒரு லிப் பாம் செய்யுங்கள். அதற்கு, சிறிதளவு கொக்கோ பட்டரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனோடு, சிறிது லிப்ஸ்டிக்கை சேர்த்து அவை உருகும் வரை சூடு படுத்தவும். சூடு ஆறிய பின்பு, அதனை ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இப்போது சூப்பரான புதிய லிப் பாம் ரெடி.

புது நிற லிப்ஸ்டிக்
பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படக்கூடிய பிரச்சனை என்னவென்றால், ஒரே நிற லிப்ஸ்டிக்கை வாரம் முழுவதும் அல்லது அடிக்கடி பயன்படுத்தி நேரிடுவது. எவ்வளவு பயன்படுத்தினாலும் லிப்ஸ்டிக் அவ்வளவு சுலபமாக காலி ஆகாது. எனவே, அதற்கான ஒரு சுலபமான வழியை தெரிந்து கொள்வோமா? அது தான் மீதமுள்ள அல்லது அடிக்கடி பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை வேறு நிறத்தோடு கலந்து புது நிறத்தை உருவாக்குவது. லிப் பாம் தயாரித்த அதே முறையில், இரு நிறங்களை கலந்து புது நிற லிப்ஸ்டிக்கை தயாரிக்கலாம். லிப்ஸ்டிக்கிற்கு எப்போதும், பிரஷை காட்டிலும் டியூப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.

நடிகை யாமி கவுதமுக்கு இந்த சரும பிரச்சனை இருக்காம்.. அதுவும் குணப்படுத்த முடியாததாம்.. அதென்ன பிரச்சனை?நடிகை யாமி கவுதமுக்கு இந்த சரும பிரச்சனை இருக்காம்.. அதுவும் குணப்படுத்த முடியாததாம்.. அதென்ன பிரச்சனை?

ப்ளஷ்
லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதற்கான அற்புதமான மற்றொரு வழி என்றால் ப்ளஷ் தான். அதனை பயன்படுத்துவதன் மூலம், கன்னங்களுக்கு இயற்கை பொலிவு கிடைத்தது போன்ற தோற்றமளிப்பதோடு, கரும்புள்ளிகளும் மறைந்திடும். இதற்கு, சிறிது சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தொட்டு, கைகளாலேயே கன்னங்களில் தடவி, மேக்கள் பிரஷ் உபயோகித்து பரப்பி விட வேண்டும். பின்னர், பவுடர் போட்டுக் கொள்ளவும். ப்ளஷ் இல்லாத சமயங்களில் லிப்ஸ்டிக்கை இப்படி உபயோகிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐ ஷேடோ
சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை ஐ ஷேடோவாக உபயோகித்தால் அட்டகாசமாக இருக்கும். அடர்த்தியான சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை உதட்டிற்கும் போட்டுக் கொண்டு, கண்களுக்கும் போட்டு கொள்ளலாம். கைகளால் அல்லது பிரஷ் உபயோகித்து ஐ ஷேடோ போட்டு கொள்ளலாம். அதன் மேல் ஹைலைட்டல் அல்லது கிளிட்டர் போன்றவை கூட உபயோகித்து கொள்ளலாம். லிப்ஸ்டிக்கை இப்படி உபயோகிப்பது நிச்சயம் ஓர் அற்புதமான அழகான வித்தியாசத்தை காட்டும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில், அவசர வேளைகளில் லிப்ஸ்டிக்கை நீங்கள் வேறு விதத்தில் கூட உபயோகித்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தவிர, பயன்படுத்தாத, மீதமுள்ள லிப்ஸ்டிக்குகளை கூட இப்படி உபயோகிக்கலாம். வீணாக தூக்கி எறிவதற்கு பதில் இப்படி செய்வதால், புதிய நிறத்திலான மேக்கப் பொருட்கள் கிடைத்தது போல் இருக்கும் அல்லவா?

நன்றி | boldsky

இதையும் படிங்க

பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முல்தானி மெட்டி மாஸ்க்

முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

பெண்கள் மார்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்

மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது

இன்றைய குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். பெற்றோர் சொல்லித்தரும் விஷயங்களை கற்பூரம் போல பற்றிக்கொள்கின்றன. அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.

பாத வெடிப்புக்கான தீர்வுகள்

உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.

குழந்தைகள் கோபப்படுவதற்கான காரணமும்…. பெற்றோர் செய்ய வேண்டியவையும்…

சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை...

புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றையச் சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்...

தொடர்புச் செய்திகள்

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான...

மோடியுடன் பேச்சுவார்த்தை -இந்தியா சென்றார் பசில்..!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி...

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கவலைகளை பறந்தோட செய்யும் தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்

ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.

உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக்

பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை...

மேலும் பதிவுகள்

சத்தான சம்பா கோதுமை கஞ்சி

கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி...

இந்த மந்திரத்தை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிப் பாருங்கள்!

தெய்வீக சக்தியை நம் பக்கம் சுலபமாக ஈர்க்கக் கூடிய ஒரு வழி தான் மந்திர பிரயோகம். கோவிலுக்கு செல்லும் பொழுது வெறுமனே சாமி...

வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்

பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை பிடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து வலை வீசி வருகிறாராம். தமிழில்...

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது

இன்றைய குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். பெற்றோர் சொல்லித்தரும் விஷயங்களை கற்பூரம் போல பற்றிக்கொள்கின்றன. அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.

பிந்திய செய்திகள்

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான...

மோடியுடன் பேச்சுவார்த்தை -இந்தியா சென்றார் பசில்..!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி...

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு...

துயர் பகிர்வு