Tuesday, January 18, 2022

இதையும் படிங்க

பெண் குழந்தைகளுக்கு தந்தை தான் ஹீரோ

ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்து கொள்வதற்கான காரணத்தை பார்க்கலாம்.

பெண்களே பழைய வளையல்களில் கண்கவர் கைவினைப் பொருட்கள் செய்யலாம்…

பழையதாகிப்போன வளையல்களை தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு வீட்டை அழகுபடுத்தும் கைவினைப் பொருட்களை எளிமையாகச் செய்து கொள்ளலாம். பெண்களுக்குப்...

கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்…

செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.

குழந்தைகளிடம் பெற்றோர் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும்…

ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?

புத்தகம் வாசிப்பு என்பது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாத ஒரு பொழுது போக்கவே மாறிவிட்டது. குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த என்ன...

பெற்றோர் சண்டையும்… குழந்தைகளின் மனநிலையும்….

குழந்தைகளிடம் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக்கூடாது. வாக்குறுதியை தவற விடும் பெற்றோரிடம் குழந்தைகளின் நம்பிக்கை குறையும். பெற்றோர் சண்டையும்......

ஆசிரியர்

இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள். பலர் இளம் வயதிலேயே முதிய தோற்றத்துடன் வலம் வருவதையும் காணமுடிகிறது. உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

சமச்சீரான சத்துணவை போதுமான அளவில் தினமும் உட்கொண்டால் இளமையை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்போது நோய்கள் ஏற்படாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும்.

ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் என்றால் சிலவகை உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானத்தை அறவே தவிர்த்திடுங்கள். காபி, டீ பருகுவதை குறைத்திடுங்கள். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சரும அழகின் எதிரிகள் என்பதை உணர்ந்திடுங்கள். பழங்களை சாப்பிடலாம். பால், சர்க்கரை போன்றவை சேர்க்காத கிரீன் டீ பருகுவதையும் பழக்கத்தில் கொண்டுவரலாம்.

உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள். சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு ஏதாவது ஒருவகையில் வேலைகொடுங்கள்.

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் இளமைக்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். கண்களில் கருவளையம் இருந்தால் பளிச்சென்று மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கும் ஹுமோகுளோபினை சில என்சைம்கள் சிதைக்கும்போது, அது கருவளையமாக தென்படும். இதற்கு சரும டாக்டர்களிடம் இருந்து ‘ஜெல்’ வாங்கி பூசலாம் என்றாலும், இயற்கையான சிறந்த மருந்து ஆழ்ந்த உறக்கம்தான். தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்கி எழுந்தால் கருவளையம் அகலும். தினமும் போதுமான அளவு தண்ணீரும் பருகவேண்டும்.

சிலரது முகத்தில் இளமை கொலுவிருக்கும். ஆனால் அவர்களது கையின் புறப்பகுதியில் சரும சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமையை பறைசாற்றிவிடும். நடுத்தர வயதை கடக்கும்போது உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய தொடங்கும். அப்போது கோலாஜென், எலாஸ்டின் போன்றவை தளர்ச்சியடையும். அதனால்தான் சரும சுருக்கம் தோன்றுகிறது. இதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறி, பழம் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.

சிறிதளவு சர்க்கரையை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து குழைத்து சருமத்தில் பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் இறந்த செல்கள் அகன்று சருமம் புதுப்பொலிவுபெறும். சருமத்தின் அழகுக்கு வெளியே எத்தனை வேலைப்பாடுகள் செய்தாலும், உடலுக்கு உள்ளே அதற்கான சரியான மாற்றங்கள் உருவாகவேண்டும். உள்ளே ஏற்படும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது, சீரான ரத்த ஓட்டம். ரத்தத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தால்தான் ரத்த ஓட்டம் துரிதப்படும். கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

எவ்வளவு இளமையோடு நீங்கள் ஜொலித்தாலும், அதற்கு புன்னகைதான் கிரீடம் சூட்டும். அதனால் சிரிப்பை எல்லா நேரங்களிலும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சிரிக்கும்போது முகத்திற்கு கூடுதல் ரத்த ஓட்டம் செல்லும். ஏராளமான தசைகள் செயல்பட்டு முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும். இளமை கொலுவிருக்க இதழ்விரித்து சிரியுங்கள்!

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

புராண காலத்தில் புதுமைப் பெண்கள்…

தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என சித்தரிக்கப்படும் சங்ககாலத்தில் ஆண் புலவர்களுக்கு நிகராக பெண் புலவர்கள் இலக்கியத்தில் திறன் மிக்கவர்களாக இருந்துள்ளனர்.

திருமண வயது உயர்வும்.. குழந்தை திருமண பின்னணியும்..

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் முற்றிலும் ஒழிக்கமுடியாத நிலை நிலவுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

டீன்ஏஜ் பெண்களை சமாளிக்க அம்மாக்களுக்கு புதிய அனுபவம் தேவை

டீன் ஏஜ் பெண்களை அதிகமாக திட்டவும், கண்டிக்கவும் முடியாது. சிலர் பொசுக்கென்று ஏதேனும் முட்டாள்தனமான முடிவை எடுத்து விடுவார்கள்.

முகத்திற்கு பாதிப்பு தரும் பொருட்கள்

உடலில் உள்ள முடியை அகற்றுவதற்கு வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு இதனை பயன்படுத்தக் கூடாது.

குழந்தைகள் வாழ்வில் பண்டிகைகளின் முக்கியத்துவம்

தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன. வாழ்வில்...

குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி தரும் செல்லம்… எதிர்க்கும் பெற்றோர்…

தாத்தா பாட்டியின் நிழலில் வளர்வது குழந்தைகளுக்கு எப்போதும் நன்மையே என்றாலும், குழந்தையின் பெற்றோர் தாத்தா பாட்டியின் வளர்ப்பு முறையை ஏற்றுக் கொள்வதில்லை.

தொடர்புச் செய்திகள்

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்…

இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால்...

இன்று மக்ரோனி சூப் செய்யலாம் வாங்க…

குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியை வைத்து அருமையான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை!

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் அவசியம்

பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பாலைக் கொடுப்பது நல்லதல்ல; தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத்...

திருமண வயது உயர்வும்.. குழந்தை திருமண பின்னணியும்..

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் முற்றிலும் ஒழிக்கமுடியாத நிலை நிலவுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பரிகாரங்கள் பற்றிய தவறான கண்ணோட்டம்

பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள...

மேலும் பதிவுகள்

பொங்கல் அன்று சமைக்கும் உணவுகளின் பயன்கள்

பொங்கல் பண்டிகை அன்று சமைக்கும் ஒவ்வொரு உணவும், சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை. அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். எந்த...

பொங்கல் ஸ்பெஷல்: சாக்லேட் பொங்கல்

நாளை பொங்கல் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று இந்த பொங்கல் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் அவசியம்

பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பாலைக் கொடுப்பது நல்லதல்ல; தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத்...

டீன்ஏஜ் பெண்களை சமாளிக்க அம்மாக்களுக்கு புதிய அனுபவம் தேவை

டீன் ஏஜ் பெண்களை அதிகமாக திட்டவும், கண்டிக்கவும் முடியாது. சிலர் பொசுக்கென்று ஏதேனும் முட்டாள்தனமான முடிவை எடுத்து விடுவார்கள்.

திங்கட்கிழமை சோர்வும்.. தீர்வும்..

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை உற்சாகமாக கழித்துவிட்டு திங்கட்கிழமை சோர்வை தவிர்க்கவும், வாரத்தின் முதல் நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் செய்ய வேண்டிய வழிமுறைகள்:

முகத்திற்கு பாதிப்பு தரும் பொருட்கள்

உடலில் உள்ள முடியை அகற்றுவதற்கு வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு இதனை பயன்படுத்தக் கூடாது.

பிந்திய செய்திகள்

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்…

இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால்...

இன்று மக்ரோனி சூப் செய்யலாம் வாங்க…

குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியை வைத்து அருமையான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை!

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .

இலங்கை தமிழர் தரப்பின் ஆவணம் மோடிக்கு செல்கிறது!

இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வுக்காக இந்திய பிரதமருக்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனின் தலைமையில், வடக்கு கிழக்கு...

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை...

எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள...

துயர் பகிர்வு