Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் இதை இப்படி தான் பார்த்து வாங்க வேண்டும்

இதை இப்படி தான் பார்த்து வாங்க வேண்டும்

3 minutes read

தேங்காய்

தேங்காய் வெள்ளையாக இருக்க கூடாது. கறுப்பாகவும் இருக்க கூடாது. பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். தேங்காயின் குடுமி ஈரமாக இருக்க கூடாது. தேங்காயை எடுத்து பார்த்தால் கனமாக இருக்க வேண்டும். தேங்காயை ஆட்டிபார்த்தால் நீர் குறைவாக இருக்க வேண்டும்

வெங்காயம்

வெங்காயம் பெரியதாகவோ, சிறியதாகவோ எப்படி இருந்தாலும் அதை அழுத்தி பாருங்கள். ஈரம் இருக்க கூடாது. நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். வெங்காயம் வாலோடு இருந்தால் வாங்க கூடாது.

வாழைக்காய்

வாழைக்காய் காம்பை உடைத்தால் வெள்ளையாக இருக்க வேண்டும். இது சற்று இளசாக இருந்தாலும் அதை பயன்படுத்தலாம். பஜ்ஜிக்கு வாங்குவதாக இருந்தால் முற்றியதாக பச்சை நிறத்தில் வாங்க வேண்டும்.

வாழைக்காயை சுத்தமாக பால் போக கழுவி தண்ணீரில் போட்டு வைத்தால் வாடாமல் பழுக்காமல் இருக்கும்.

முருங்கைக்காய்

முருங்கைக்காய் சற்று பருமனாக உருண்டையாக இருக்க வேண்டும். நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்க வேண்டும்.
மஞ்சள் கலந்த காய் அல்லது விதைகள் வெளியே தெரியும்படி இருந்தால் அது முற்றிய காய். அதை சமைக்க கூடாது. பட்டையாக இருந்தாலும் வாங்க கூடாது.

தக்காளி

தக்காளி பார்க்க கெட்டியாக உருண்டையாக செங்காயாக பார்த்து தான் வாங்க வேண்டும். முரடாக இருந்தால் சதைப்பகுதி குறைவாக இருக்கும்.

உடனடி சமையலுக்கு என்றாலும் கூட தக்காளியை கெட்டியாக பார்த்துதான் வாங்க வேண்டும். பழம் மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுபோயிருக்கும். காம்புக்கு அருகே பச்சையாகவும் அடிப்பாகம் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். பழுக்காத தக்காளியை அரிசி டப்பாவில் போட்டால் பழுத்துவிடும்.

கத்தரிக்காய்

கத்தரிக்காய் காம்பில் முள் இருந்தால் ஃப்ரெஷ்ஷானவை. காம்பு கறுத்து இருந்தால் சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் பழைய காய் என்று அர்த்தம். கத்தரிக்காய் பச்சை நிறமாக இருந்தால் அதன் மேல் வரிகள் இருந்தால் அவை கசக்கும். குழம்பு கசப்பாக இருக்கும்

கத்தரிக்காய் ஒட்டை இல்லாமல் இருந்தால் தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவிய நீரில் போட்டால் அவை கருப்பாகாமல் இருந்தால் அது நல்ல காயாக இருக்கலாம்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் வாங்கும் போது அதன் காம்பு இருக்கும் இடத்தில் முகர்ந்து பார்க்க வேண்டும். பழைய காம்பாக இருந்தால் முகர்ந்து பார்க்கும் போது, அவை நாற்றமடிக்கும். புதியதாக இருந்தால் அந்த காம்பு நாற்றமடிக்காது.

இலைகள் வெள்ளையாக இருந்தால் முட்டைக்கோஸ் நன்றாக இராது. இதழ்கள் நெருக்கமாக இருக்க வேண்டும். பச்சையாக இருந்தால் அவை இளசானவை காய் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் சுவையாக இருக்கும்.

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் பச்சை பசேல் என்று இருக்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து, வெள்ளை புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலானது.

சற்று மெல்லிய காய்களாக பச்சையாக இருக்கும்படி நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும் பச்சையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கு நீள்வட்டத்தை விட உருண்டை வடிவமாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். இந்த கிழங்கை நிண்டி பார்த்தால் தோல் வரும்.

வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.

பீட்ரூட்

பீட்ரூட் மெல்லிய தோலுடன் இருக்க வேண்டும். தோல் கடினமாக இருக்க கூடாது. மெல்லிய தோலாக இருக்க வேண்டும். நகங்களில் கீறீனால் பளபளவென்று கருஞ்சிவப்பு நிறமாக இருக்க வேண்டும்.

எலுமிச்சம்பழம்

நல்ல மஞ்சளாகவும் தோல் கடினமில்லாமல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

காய் மெத்தென்று அமுங்கினால் காம்புக்கு அருகில் கன்றியிருந்தால் நாட்பட்ட பழம் ஆகும். இதை வாங்க கூடாது.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் காம்பு காய், இரண்டுமே பச்சையாக இருக்க வேண்டும். காம்பு சுருங்கியிருந்தாலும், கருத்து இருந்தாலும் அது பழையதாக இருக்கும்.

உருளைக்கிழங்கு

கெட்டியாக இருக்க கூடாது. பச்சை நிறம் வெளியே தெரியக்கூடாது. முளை விட்டு இருக்க கூடாது. தோல் கிழங்காக இருந்தால் தோல் பளபளப்பாக இருக்க வேண்டும். அடர்ந்த பிரவுன் நிற கிழங்காக இருந்தால் தோல் சொரசொரவென்று இருக்க வேண்டும்.

கொத்துமல்லி, கறிவேப்பிலை

கறிவேப்பிலை இலை மிகச்சிறியதாக இருக்க வேண்டும். மெலிதாக நீண்ட இலைகளில் அதிக மணம் இருக்காது. கொத்துமல்லி கீரை பழுப்பு இல்லாமலும் பூ இல்லாமலும் வாங்க வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More