Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

நீள் இரவு | சிறுகதை | கவிஜி

இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான். எல்லாம் மியூட் ஆகி... காலத்தைக் கடப்பது சகிக்க இயலாத கசப்பின்...

அம்மாவின் கனவு | பா.உதயன் கவிதை

ஆயிரம்கவி எழுதிஅடுத்தடுத்துபேப்பரில் போட்டேன் காலை மாலைஎன்று சொல்லிபாவம் நானும்பார்த்திருந்தேன் காலை வந்தபேப்பரிலும்மாலை வந்தபேப்பரிலும்காணவில்லைஎன் கவிதனையே

கலாச்சார அதிகாரசபையின் நினைவரங்கம்

மாளிகைக்காடு நிருபர்  சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார பிரிவு மற்றும்  கலாச்சார அதிகாரசபையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து...

கல்முனை பூபால் ‘கவிமாமணி நீலாபாலன்’ காலமானார்!

கவிஞர் கல்முனை பூபால் என்றகவிமாமணி நீலாபாலன்இன்று காலை காலமானார்… - ஈழக்கவி தமிழ்க் கவிதை...

முட்டாளாட்சி | சி்.கிரிஷாந்த்ராஜ் கவிதை

நீதி தேவதைநிர்வாணமாய் நிற்கிறாள்!ஆடை களைந்ததுஅரசாங்கம்தான்!கைகளில் தராசைஏந்திக்கொள்வதா?மார்பையும் பிறப்புறுப்பையும்மறைத்துக்கொள்வதா? நடுத்தெருவில்சாமானியனைஏறி மிதிக்கும் சட்டம்,ஆளுங்கட்சியின்மடியில் சூப்பிகுடித்துப் படுத்திருக்கிறது!

ஆசிரியர்

எது வளர்ச்சி | சிறுகதை | லாவண்யா ஜெகன்நாதன்

சிறிதும் சுருக்காத விழிகள் ஏக்கம் நிறைந்த மனசுடன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் தனது 20 வருட வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொந்த கிராமத்தை பார்க்கும் மகிழ்ச்சியில் நவீன் வருகிறான்.

இதுவரையிலும் செல்போன் விடியோ காலில் மட்டுமே பார்த்த அம்மா அப்பா தம்பி பெரியப்பா சித்தப்பா சித்தி நண்பர்கள் என அனைவரையும் நேரில் பார்த்து பேச வேண்டும் மனதில் தேங்கிக் கிடக்கும் அழுத்தங்கள் எல்லாம் தொலைத்துவிட்டு. இனி உங்களுடனே வாழ வேண்டும் என்று அவனது நினைவில் சாலையில் முன்நோக்கி செல்லும் பேருந்தின் பின்நோக்கி செல்லும் உயர் கட்டிடகள் மரங்களை போன்று ஒடிக் கொண்டிருந்தது.

நவீனின் சிறுவயது நண்பர்களுடன் கிணற்றில் நீச்சல் போட்டது, திருட்டு மாங்க  கோவைப் பழத்திற்கு நண்பர்களுடன் சண்டையிட்டது என அனைத்தும் அவன் கண்களுக்கு காட்சி பொருளாக வந்து சென்றது.

பசுமையான நிலங்கள் குறுகிய சாலை அதில் மாட்டு வண்டி சவாரி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து அதைப் பிடிக்க ஒடிய ஒட்டங்கள். மாலை நேரம் தவராது போலீஸ் திருடன் விளையாட்டு இரவு உணவை தெரு விளக்கின் கீழ் அமர்ந்து நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்ட காலத்தை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தான்..

பேருந்து நடத்துனர் வீசில் அடித்தார் ஆரணி பைபாஸ்லாம் இறங்கிக்கோ என்றார்..!

உடனே சற்றென்று எழுந்து தனது பைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் நவீன்.

நல்ல விசாலமான இரு சாலைகள் இடைவிடாது இயங்கும் வாகனங்கள். சாலையில் சில நிமிடம் நின்றும் கடக்க முடியாத நிலை வேகமாக வந்து செல்லும் வண்டிகளைப் பார்த்து வியந்து நின்றான்.

ஒரு நிமிடம் வாயடைத்தும் போனா. இது நம்ம ஊர் தானா என்று?  இந்த சாலை வசதியை பார்த்தாலே தெரிகிறது நமது கிராமமும் நல்ல மாற்றத்துடன் முன்னேற்றத்துடன் வளர்ச்சியடைந்துள்ளதே என்று பெரும் மகிழ்ச்சியடைத்தான்.

நான் இல்லாத இந்த 20 வருடத்திலா இவ்வளவு மாற்றம்?

நம்பவே முடியவில்லை என்று அவன் மனதிற்குள்ளே கேள்விகளை கேட்டுக் கொண்டான்.

சாலையின் ஒரங்களில் ஒரு மரம் கூட இல்லையே என்ன கவலை தோன்றினாலும் அவன் பார்க்குமிடம் எல்லாம் கட்டிடங்களாகவே சூழ்ந்திருந்தது.  அவனை திசைமாற்றி ஒர் இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது.

நவீனின் கிராமம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பைபாஸ் சாலையில் இருந்து நடக்க வேண்டும். பேருந்கிதிற்காகக் காத்திருந்தால்  நேரம் அதிகமாகுமோ என்ற எண்ணத்தில் நடக்க ஆரம்பித்தான்.

மத்திய வேலை என்பதால் உச்சி வெயில் தலையை வறுத்தெடுத்தது. அதை சிறுதும் பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தான்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவனால் நடக்க முடியவில்லை

வெளிநாட்டு கால நிலையில் பழகிய உடலாச்சே. நம்ம தமிழ்நாட்டு வெயிலை தாங்கிக் கொள்ளமுடியுமா என்ன? சாலையில் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தான். சாலையே வெறிச்சோடி கானல்நீர் பூத்திருப்பதை தான் அவன் கண்கள் காட்டியது.

வெயிலின் தாக்கத்தை தனிக்க சாலையின் ஒரத்தில் ஒரு மரத்தைக்கூட வளர்க்கவில்லையே என்ற வருத்தம் தோன்றியது.  மரத்தின் நிழலை தேடினான் ஆனால் ஒரே ஒரு ஒற்றை மரம் கூட அவன் கண்களுக்கு தெரியவில்லை! காரணம் அங்கே மரங்களே இல்லை!

சரி  ஒரே முழு மூச்சா வீட்டிற்கு நடந்தே சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

மீண்டும் வந்த சாலையை திரும்பி பார்த்தான். யாராவது பைக்கில் வந்தால் லிப்டுக் கேட்டு சென்றுவிடலாம். இனி நடக்க முடியாது சாமி என்ற மனநிலைக்கே வந்துவிட்டான்.

சற்று தொலைவில் வரும் பைக் சத்தம் நவீன் காதில் விழ திரும்பி பார்த்தான். தூரத்தில் ஒருவர் பைக்கில் வருவதை பார்த்தான். பைக்கில் வருபவரின் முகம் கானல் நீர் மறைத்தாலும் வருபவரிடம் லிப்டு கேட்டு சென்றுவிடலாம் என்று அங்கையே நின்று கையை உயர்த்தி லிப்டு கேட்டான் நவீன்.

வந்தவன் நவீனின் தோழன் ரகு. டேய் நவீன் எப்படி இருக்கடா.   உன்ன கூட்டி வர தான் நான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருத்தேன். ஆனா நீ என்னடானா பைபாஸ்ல இறங்கிட்ட… சரி இறங்கிட்டு ஒரு போன் பண்ணிருக்கலாம்ல என ரகு கேட்டான்..

அதற்கு நவீனும் நான் நலம் தான் ரகு நீ?

நானும் நலம் தான் நவீன். ஏன் ஒரு போன் கால் பண்ணிருக்கலாம்ல

அதலாம் ஒன்னுமில்லடா உங்களுக்கு ஏன் கஷ்டத்த கொடுக்கனும்னு தான் நான் யாருக்கும் போன் பண்ணல நானே நடந்து வந்திடலானு பார்த்தேன். ஆனால் இந்த வெயிலுக்கு என் உடம்பு தாங்கலடா. அதான் லிப்ட் கேட்டு போய்டலாம்னு லிப்ட் கேட்டால் நீ வரடா ரகு.

டேய் போதும்டா வா போகலாம் என்றான் ரகு.

நவீன் ரகுவிடம் கேட்டான் நம்ம ஊர் சூப்பரா மாறிடுச்சில இப்படி பார்க்க தான் நல்லா இருக்குடா ரகு. நான் இல்லாத இந்த 20 வருஷத்துல இப்படி ஒரு மாற்றம் நம் ஊருக்கு வரும்னு நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

நல்ல முன்னேற்றம் தான். இன்னும் வெளிநாடு மாதிரி நம்ம ஊர் மாறனும்டா ரகு. என்ன நான் சொல்வது சரி தானே ரகு?

ஆமாம்டா நவீன் நல்ல முன்னேற்றம் தான். இன்னும் வளர்ச்சி தேவை தான் ஆனால் அந்த வளர்ச்சையை வைத்து யார் வாழ்வதுடா?

என்னடா ரகு நீ இப்படி கேட்டுட்ட? நாம தான் வாழனும்டா வளர்ச்சி ஒவ்வொரு கிராமத்துக்கும் தேவைடா. ரகு வளர்ச்சி எங்க இருக்கோ அந்த இடத்தில் தான் வேலை வாய்ப்புகளும் பெருகும்டா.

இந்த வளர்ச்சி மட்டும் 20 வருஷத்துக்கு முன்னாடியே வந்திருந்தால் நானும் இலங்கையிலே இருந்திருப்பேன். உங்களையும் பிரிந்திருக்கமாட்டேன்ல..

ஆமாம் சரி தான் நவீன் ஆனால் உனக்கு ஞாபகம் இருக்கா சிறுவயதில் நாம் கிணற்றில் நீரூற்று இப்படி பைப்பில் கொட்டும் தண்ணீரைப் போன்று கிணற்றில் பீரிட்டு வருகிறது என பேசுவாம் ஞாபகம் உள்ளதா? அதைவிடு ஒரே ஒரு இரவில் கிணற்றில் தண்ணீர் பாதியை எட்டிவிடுகிறது அதிலும் இரவில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சியும் கிணற்றில் தண்ணீர் குறையாமல்  காலை பார்த்ததைவிட மறுநாள் அதைவிட அதிகமாகவே நீர் இருக்கும் தானே. ஆனால் இப்போது பார் நவீன் இந்த கிணற்றை என்று சாலையின் ஒரம் பைக்கை நிறுத்திவிட்டு கிணற்றை காட்டினான் ரகு.

கிணறை பார்த்த நவீனுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. சிறுவயதில் நீச்சல் பழகிய கிணறு அது! இன்று தண்ணீர் இல்லாமல் வற்றி காய்ந்து தூர்வாராமல் கிடப்பில் இருந்தது.

ரகு என்னடா கிணறு இப்படி  இருக்கு?  அப்போ நீ எனக்கு வீடியோ எடுத்து அனுப்புவியே அந்த கிணறு எங்கடா?

கொஞ்சம் பொறுடா நவீன் நான் ஒவ்வொன்னா சொல்லிட்டு வரேன்.

இந்த கிணற்றையும் நிலத்தையும் வேறொருவருக்கு விற்று விட்டார்கள். இதை வாங்கியவரும் கிடப்பில் போட்டு விட்டார். அதான் இந்த நிலையில் உள்ளது நவீன்.

ஏன் ரகு  நிலத்தை வாங்கியவர் விவசாயம் பண்ணலையா? மழையும் நல்லாதானே வருது?

ஆமாம் நவீன் மழை வந்தால் மட்டும் போதுமா என்ன..

விவசாயத்தில் வரும் பணத்தை விட வீட்டு மனை அல்லது ரைஸ் மில்லை கட்டினால் போதும் பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம். அதான் நிலத்தை இப்படி விட்டார்கள். அப்போ தானே அரசு இங்க கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கும்!

வேற என்ன வேண்டும்  விவசாயம் செய்ய?

நல்ல மழை வந்தாலும் கிணற்றில் ஒரு மாதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பத்தில்லை. நீருற்றும் சுத்தமாக நின்றுவிட்டது. 1000அடி வரையிலும் போர் போட்டது தான் மிச்சம். தண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை..

கைகக்கு  கிடைத்தது சாம்பல் மண் தான்.

கொஞ்ச நேரத்திற்கு முன் நீ கேட்டியே நவீன் அந்த வளர்ச்சி தான் இந்த நிலத்தடி நீரின் உயிரை பறித்துக் கொண்டது!

டேய் ரகு வளர்ச்சி எப்படி நிலத்தடி நீரின் உயிரை பறிக்கும்?

நவீன் வளர்ச்சி என்ற பெயரில் நிலத்தில் வேறும் கட்டடங்களாக கட்டினால் மட்டும் போதுமா?  மரங்களை வெட்டுவது காடுகளை அழித்து தொழிற்சாலைகளை கட்டிவிடுவது அந்த நிறுவனத்திற்கு சாலை வசதி கொடுக்க சிறு மலைகளையும் வெட்டியெடுத்து விடுகிறார்கள். அது போதாது என்ற குறைக்கு கட்டிடங்களை அழகாக கட்ட வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய மலைகளை எல்லாம் வெட்டி எடுத்து விடுகிறார்கள். மலைகள் காடுகள் இருந்தால் தானே மழை வரும்.  மண் தரையாக இருந்தால் தானே மழை நீர் நிலத்துக் கடியில் செல்லும் எல்லாம் சிமெண்ட் தரையானால் எப்படி நிலத்தடி நீர் உயரும்?

மலைகளையும் மரங்களையும் காடுகளையும் அழித்து வருகிறது தான் வளர்ச்சியா நவீன்?

ரகு உனக்கு விவரம் பத்தலடா நீ வெளிநாட்டு வந்திருந்தினா அப்போ தெரிந்திருக்கும் ஒரு நாட்டுக்கு வளர்ச்சி எவ்வளவு முக்கியம்னு?

சரியாதான் சொல்ற நவீன்? வெளிநாட்டில் என்னனென்ன நிறுவனங்கள் உள்ளது?

எல்லாம் வகையான நிறுவனங்களும் உள்ளது ரகு.

சரி டா நவீன் நீ 20 வருடம் இருந்த வெளிநாட்டில் வாலாஜாவில் இயங்கும் தோல் நிறுவனம்  திருப்பூரில் ஆடை  நிறுவங்கள் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீதேன் குழாய் போன்ற நிறுவனங்கள் இயங்குகிறதா என்ன?

இந்த நிறுவனங்கள் அங்கே தான் தலைமையிடம் ரகு. அங்கே முழுவதும் வேறுமாதிரியான நிறுவனங்களே உள்ளது காற்று மரம் நீர் வளமான நிலங்களை  மாசு ஏற்படுத்தாத வகையில் நல்முறையில் பாதுக்காகிறார்கள்டா ரகு.

நவீன் இந்த தொழிற்சாலைகள் அவர்களின் சொந்த நாட்டில் இயக்க முடியுமா? அப்படி அங்கே இயங்கினால் அந்த நாட்டிற்கு இன்னும் வளர்ச்சியை தானே கொடுக்கும். ஏன் அங்கே இயங்காமல் இந்தியாவிடம் வரவேண்டும்?

அப்படி அங்கே இந்த நிறுவனங்கள் இயங்கினால் காற்று நிலத்தடிநீர் நிலம் என அனைத்தும் நாசமாகும்.

அது  மனிதர்களையும் விட்டுவைக்காது. நோய் தொற்றும் வரும் என்பதால் தான் இந்தியாவை நாடி வருகிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் நம்மை மட்டுமில்லை நமது இயற்கை வளத்தையே அடியோடு அழித்துக் கொண்டிருக்கிறார்கள் நவீன்.

ரகு அப்படி மொத்தமா சொல்வதும் தவறு டா. அந்த தொழிற்சாலைகளால் தானே வேலை வாய்ப்பு கல்வி என நாம் வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறோ. இது புரியவில்லையா உனக்கு?

ம்ம்ம்ம்… நல்லாவே புரியுதுடா நவீன்

எந்த தொழிற்சாலைகள் அரசு பள்ளிகளை தத்தெடுத்துள்ளது?

எந்த தனியார் நிறுவங்கள் காடுகளை பாதுகாக்க முன்வந்துள்ளது. எந்த எண்ணெய் நிறுவனங்கள் பொது மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நடந்துக் கொண்டது?

இதில் எதுவுமே அவர்கள் செய்யவில்லையே.  அவர்கள் நமக்கு  வளர்ச்சியைத் தரவில்லை நம்மை வளரவிடக்கூடாது  என்பதற்காக வந்தவர்கள்.

நமது ஒட்டுமொத்த விவசாய வளர்ச்சியை அழிக்க வந்த போர்வீரர்கள்டா.  இது உனக்கு தான் புரியவில்லை நவீன்.

நீ சொல்வதை பார்த்தால் மொத்த தொழிற்சாலைகளையும் இழுத்து மூடிடவேண்டியதுதான் ரகு!

எல்லா தொழிற்சாலைகளையும் நான் மூடிவிட சொல்லவில்லை. அதற்கு மாறாக அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் புகைகள் காற்றில் எத்தனை சதவிகிதம் மாசு ஏற்படுகிறது என்று பதிவு செய்ய வேண்டும். கிராமத்தை சுற்றிலும் மாதிரி மண்ணையும் குடிநீரையும் பரிசோதனை செய்ய வேண்டும். இதை அரசின் இணையதளத்தில் தினமும் பதிவு செய்ய வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு தீடிர் சோதனையும் நடத்த வேண்டும்.  அவர்கள் எத்தனை சதவிகிதம் கெமிக்கல் பயன்படுத்துகிறார்கள். சாயக்கழிவுகளை எந்தளவிற்கு மறுசூழற்சிக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை அந்த தொழில் நிறுவனங்களே அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதில் எந்த நிறுவனத்தால் காற்று நீர் மண் மற்றும் மக்களுக்கு நோய் தருகிறதோ அந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் நவீன். இப்படி ஒரு நடைமுறை இருந்தாலே போதும் தொழிற்சாலைகளால் பாதிப்புக் குறையும் நிலத்தையும் நீரையும் காப்பாற்ற முடியும்.

ரகு நீ சொல்வதை பார்த்தால் இதற்கு முழு பொறுப்பும் அரசு தானே ஏற்கவேண்டும்?

அரசு தானே நவீன். இன்னும் சிறிது நேரத்தில் பார்ப்பாய் அரசின் நடவடிக்கையை.

ரகுவின் பைக்கு ஒரு தெருவிற்குள் சென்றது. நவீன் அந்த தெருவை பார்த்ததும் அதிர்வுற்றான்..

என்ன ரகு விவசாய நிலமாக இருந்த இடம் மொத்தமும் இப்படி கட்டிடமா இருக்கு?

நவீன் இது வெறும் கட்டிடம் மட்டுமில்லை. ரைஸ்மில் எப்படி இருக்கு பார்டா. இருந்த ரைஸ் மில்லை தாண்டி தான் நம்ம ஊருக்கே போகனும்.

நகரத்தைப் போன்று பக்கத்து பக்கத்திலேயே கட்டியுள்ளார்கள். நீ கேட்டியேடா நவீன் எனக்கு விடியோ எந்த கிணற்றில் இருந்து அனுப்பிட்டாய் என்று. அந்த கிணறை காட்டுகிறேன் வா என்று நவீனை அழைத்துக் கொண்டு ரைஸ் மில் உள்ளே சென்றான் ரகு.

ரைஸ்மிலில் மூன்று பெரிய பெரிய தண்ணீர் தொட்டிகள் இருந்தது. அதை காண்பித்தான். ரகு நான் இந்த தொட்டியில் இறங்கும் போது தான் உனக்கு நான் விடியோ எடுத்து அனுப்புவேன். கிணற்றில் நீருற்றாக வரவேண்டிய தண்ணீர். இவர்கள் போர்வேல் போட்டு மொத்தமாக எடுத்து விட்டார்கள். நிலம் கிணறும் இவர்களால் காய்ந்து போனது தான் மிச்சம்.

நெற்பயிர்களை அறுவடை செய்த பூமி இப்பொழுது மனிதர்களை அறுவடை செய்கிறது நவீன்.

இரவு பகல் முழுவதும் இந்த ரைமில் ஆலைகள் இயங்குறது. இவற்றில் இருந்து வெளியேறும் கரும்புகை நம் வீட்டின் மேற்கூரையில் படிந்து கிடக்கும். இந்த இடத்தை தாண்டுவதற்குள் மூச்சே அடைத்துவிடும். அந்தளவிற்கு மாசு படிந்த கரும்புகை காற்றிலும்  கலந்துவிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத் திணரலால் அவதிப்படுகிறார்கள்.

ரைஸ் மில் தொழிற்சாலைகளைளுக்கு இணையாக மருந்துவமனைகளுக்கும் பஞ்சமில்லை நவீன்.

மாசு படிந்த காற்றை சுவாசிப்பதாலும் உணவு முறை மாற்றத்தாலும் தொழிற்சாலைகளின் கழிவாலும் நோய்கள் அதிகரித்தது தான் வளர்ச்சியின் உச்சம் நவீன்.

நாங்களும் எவ்வளவோ கோரிக்கை மனு கொடுத்துவிட்டோ. எதுவும் மாறவில்லை நவீன்.

சரி வா நேரம் ஆச்சு வீட்டுக்கு போகலாம். நான் வேற ரொம்ப பேசிட்டேன்டா

இல்லை ரகு நீ பேசியது உண்மையான விஷயம் தான்.

வளர்ச்சி மக்களை அழிப்பதற்கானதல்ல மக்களை வாழ வைக்க வேண்டும் என்பதை எனக்கு புரியவைத்தா. நன்றி ரகு

அட போடா….. ஏய் உனக்கு விஷயம் சொல்ல மறந்துட்டேன் நவீன். இப்போ அரிசிக்கும் பட்டுபுடவைக்கும் நம்ம ஆரணி தான் பெமஸ் டா.

வளர்ச்சி மக்களுக்கானது.. உயிரை கொல்வதற்கு அல்ல!

.

நிறைவு..

– திருமதி லாவண்யா ஜெகன்நாதன்

இதையும் படிங்க

புலி நிலத்தின் கதை

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிளவு, தமிழர்களது ஆயுதப்போராட்டத்துக்கு மாத்திரமல்ல, தமிழ்த்தேசிய அரசியலுக்கே பெரும் சாபமானது. அந்த கொடிய ஆரம்பத்தின்...

அதிகம் பேசப்படும் புத்தகம்

திருமணம் என்ற ‘வதை’ புரிபடுவதற்குரிய எந்த முகாந்திரமும் கொண்டிராத சிறுமி நுஜூத், பிஞ்சு மனதுக்கே உரிய விதமாக, சில ரொட்டித் துண்டுகளுக்காகப் பிச்சை...

மன்னார் ஆயர் பற்றிய புத்தகம்

இறையடி சேர்ந்த மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வாழ்வையும் பணிகளையும் உள்ளடக்கிய விரிவான நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத ஆரம்பித்துள்ளேன்....

தாகமும் தீரும் | சிறுகதை | விமல் பரம்

“எத்தனை தடவை சொல்லீட்டன் நீ அங்க போறது எனக்குப் பிடிக்கேலை… வேண்டாம்” கணவனின் குரல் கேட்டுத் திரும்பினாள் நித்தியா.

அகரமுதல்வன் கவிதைகள்

01கடல்உன்னை அணைக்கச் சொல்கிறது.காற்றுஉன்னை தீண்டச் சொல்கிறதுகரைஉன்னை மலர்விக்க சொல்கிறதுகாதல்உன்னை ஸ்பரிசிக்க சொல்கிறதுகாமம்நம்மை காண்பிக்க சொல்கிறதுஎன் தீஞ்சுடரே!கடலுக்கு முன்...

பூரணம் | கவிதை

புற்களும்பூச்செடியாகியதுகற்களும்மெத்தையாகியது அவ்வீதியில்அவள் வரவால்என் வயதும்பத்தாகியது வழியில் முன்னேநான் நடக்கஎன் சுவடு வழிஅவள் நடக்க

தொடர்புச் செய்திகள்

தாகமும் தீரும் | சிறுகதை | விமல் பரம்

“எத்தனை தடவை சொல்லீட்டன் நீ அங்க போறது எனக்குப் பிடிக்கேலை… வேண்டாம்” கணவனின் குரல் கேட்டுத் திரும்பினாள் நித்தியா.

நீள் இரவு | சிறுகதை | கவிஜி

இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான். எல்லாம் மியூட் ஆகி... காலத்தைக் கடப்பது சகிக்க இயலாத கசப்பின்...

முருகேசன் சித்தப்பா | சிறுகதை | கயல்விழி

"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நீள் இரவு | சிறுகதை | கவிஜி

இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான். எல்லாம் மியூட் ஆகி... காலத்தைக் கடப்பது சகிக்க இயலாத கசப்பின்...

40 வயதுக்குள் மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல!

இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனை அவசியம்.

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 31 | பத்மநாபன் மகாலிங்கம்

தமிழரின் இசைக் கருவிகள்: தமிழரின் இசைக் கருவிகள் மூன்று. 'தமிழ்' என்ற சொல்லின் சிறப்பு ஒலி 'ழ' அல்லவா?  தமிழரின் இசைக் கருவிகளிலும் இந்த 'ழ'...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் | விக்கி

இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு