Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பருவக்காற்று அள்ளிவந்த மங்கை | கேசுதன் கவிதை

பருவக்காற்று அள்ளிவந்த மங்கை | கேசுதன் கவிதை

1 minutes read

அந்திநேர மூடுபனி முற்றத்தில்
கார்மேகமும் புடைசூழ
வாசற்கதவை மெல்ல திறந்திட -மெல்லிய
பருவ காற்றும் அள்ளிவந்த பருவமங்கையவள்
பனி சிந்தும் மேகமும் அவள்
உதடோடு ஒட்டியது
கூதலையும் கட்டியணைத்தபடி
கார்கூந்தல் முகையால் புன்னகையுடன்
தடம்புரட்டிச் சென்றால்- எனை

நறுமுகயும் சூடிய தேன்காற்றை போல்
தேகம் தீண்டி சென்றாள்
பொன்மலை போர்த்திய மென் முலையால்
கூதற் காற்றின் சூடு தனித்திடவே
சொந்தமாக வாவென்றேன்.

பொன்வசந்தம் அள்ளிடவா-என்
பொன்மானே
சீறிடும் நாகம் போல் திரும்பிடவே
அழகு மங்கையின் காரிருள் கூந்தலும்- ஒரு
கன்னத்தை ஒழித்தது

நாகமவள் நடையோ-அவள்
கருவண்ணம் சூடிய காரிகையோ
சிரிப்பும் சிந்திடும் சில்லறைதானோ

கொட்டிடுமே தவிலும் கோகுலத்தில்-உன்
அருகில் நானிருந்தால்-பெண்ணே
சீதனமே வேண்டாம்-உன்
சிறைக்கூண்டில் சிறைகொள்
அன்பே

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More