செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஆண்டவன் எந்த மதம் | பா.உதயன்

ஆண்டவன் எந்த மதம் | பா.உதயன்

0 minutes read

ஆண்டவன் எந்த மதம்
அறிந்தவர் சொல்லுங்கள்
ஆளுக்கு ஒரு மதமாய்
ஆண்டவன் படைத்தானா

ஆளுக்கு ஒரு சாதி
அந்த ஆண்டவன் படைத்தானா
அவன் பெரிது இவன் சிறிது
அட ஆண்டவன் சொன்னானா

உன் மதமா என் மதமா பெரியதடா
உலகில் மனிதன் சண்டையடா
அட மனிதனின் மனங்கள் மாறல்லையே
மனிதம் இங்கு வாழல்லையே

நிறங்களில் பெயரில் நிறவாதம்
இனங்களின் பெயரில் இனவாதம்
மனிதனை மனிதன் கொலை நாளும்
அட ஆண்டவன் எந்த நிறம்
அறிந்தவர் கண்டவர் சொல்லுங்கள்

வெய்யிலும் மழையும் இங்கே
வேற்றுமை பார்ப்பதில்லை
பெய்யெனப் பெய்யும் மழை
நல்லார் உலகிருந்தால்

எத்தனை மதங்கள் இருந்தாலும்
அவை எழுதிய தத்துவம் ஒன்றெல்லோ
எத்தனை கடவுள்கள் இருந்தாலும்
இது சொல்லும் மொழி அன்பென்லோ

இறுதியில் மனிதன் சேருமிடம்
இங்கே மதங்களும் மனிதரும் ஒன்றெல்லோ
இதுவே நிரந்தரம் என்று இங்கு
நீயும் நானும் சமம் அங்கே.

பா.உதயன் 

✍️

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.