உண்மையில் உயர் விருது தகுதி உள்ளவரை சென்று சேர்ந்திருக்கிறது. ஒரு மாபெரும் நாதஸ்வர பாரம்பர்யமான வித்தான கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதர்களில் பஞ்ச மூர்த்தியின் புதல்வர் குமரன்.
இதில் தனக்கென்று ஒரு இசை பாணி, தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் என அமைத்து முதல் முதலில் நாதஸ்வர உலகிற்கு “நாத சங்கமம்” என்ற ஒரு புது வடிவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி இசை வாடையே இல்லாத பாமரனை கூட தன் நாதஸ்வர இசையால் கட்டி போட்டவர்.
மேலும் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நாதஸ்வரத்தில் பின்னணி இசை வழங்கியவர் குமரன்.