December 6, 2023 11:52 pm

வெகுளி | வில்வரசன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

அவ்வளவு வேகமாய்
என் பிரம்பு பாய்ந்திருக்கத் தேவையில்லை

நாள் பூராகவும்
உடல் நோக
தொண்டை வலிக்க
உரத்துக் கற்பித்த நாவுகள்
வகுப்பறையில்
அவன் கூக்குரல் கண்டு
கொஞ்சம்
கோபப்பட்டிருக்க வேண்டும்

“எழும்படா முதல் ”
என்ற படி
மாரியம்மன் கோவில்க்
கிடாய் வெட்டும் கத்தியாய்க்
கோபமாய் பாய்கின்றது
என் பிரம்பு

கண்கள் கசிய
உள்ளங்கைகள் வெடித்து
கலங்கிப் போய்
பவ்வியமாய்
எழுந்து நிற்கும்
அவன் முன்னால்
இப்பொழுது
தோற்றுபோய் புன்னைக்கிறது

நான் கற்பித்துக் கொண்டிருந்த வெகுளாமை
அதிகாரம்.

வில்வரசன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்