December 7, 2023 2:39 am

காவற் தெய்வங்கள் | காவலூர் அகிலன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

கல்லறைகள் இல்லைத்தான்
ஆனாலும் விளக்கெரிக்கிறார்கள்
ஊதுபத்தி கொழுத்தி தூபம் காட்டுகிறார்கள்
பொங்கிப் படைக்கவும் செய்கிறார்கள்
இன்னும் சில நாட்களில்
பூக்களோடும் மாலைகளோடும்
அவர்கள் தம் இஸ்ர தெய்வங்களோடு பேசிக்கொள்ளவும் அழுது அழுது வரம் கேட்கவும்
சிரித்து மகிழ்ந்திருக்கவும்
உறவுகள் நண்பர்களோடு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்
அந்தப் புனித பூமியை நோக்கிப்
பாதயாத்திரை செல்வார்கள்
பூக்களையும் மாலைகளையும்
மண்ணுக்கும் கல்லுக்குமாய் வைத்து
மனமுருகி வழிபாடு செய்வார்கள்
எம்மைக் காத்து நின்ற தஎய்வங்களை வழிபாடு செய்வார்கள்.

காவலூர் அகிலன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்