செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் விக்டர் ராஜலிங்கத்தின் ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல் வெளியீட்டு விழா  

விக்டர் ராஜலிங்கத்தின் ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல் வெளியீட்டு விழா  

1 minutes read

தமிழ் மொழியின் தொன்மை, உலகளாவிய வரலாறு மற்றும் அதன் மொழியியல் சிறப்புகளை மையமாகக் கொண்டு   அமெரிக்காவில் வசிக்கும்    விக்டர் ராஜலிங்கம் எழுதியுள்ள  எழுதிய “உலகின் மூத்த மொழி தமிழ் மொழி” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 1ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெறவுள்ளது.

நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வு மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நூலின் வெளியீடு  திரு. ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ளது. நிகழ்வை கவிஞர் தீபச்செல்வன் நெறியாள்கை செய்கிறார்.

தவத்திரு வேலன் சுவாமிகள் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதுடன்  நிகழ்வில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் சிதம்பரநாதன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், பேராசிரியர் சிவலிங்கராஜா, பேராசிரியர் விசாகருபன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ் மொழியின் பெருமையையும் உலகளாவிய வரலாற்றுப் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.