நேற்று இடம்பெற்ற சாகித்ய விருதுகள் விழா – 2022 இல் சிறந்த நாவலுக்கான சாகித்ய விருதினை பெற எழுத்தாளர் சிவ ஆரூரன் அவர்கள் சிறையில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் வருகைதந்து விருதினை பெற்றுக்கொண்டார்.
விமர்சகர்கள் கண்களில் படாத முதன்மை நிலை படைப்பாளி சிவ.ஆரூரன்
யார் இந்த சிவ.ஆரூரன் ?
சிறை கம்பிகளுக்கு பின்னால் வாழ்ந்து கொண்டு தமிழ் மீதான அளவற்ற பிடிப்பு காரணமாக கிடைக்கும் நேரத்தை பொன்னாகிக் கொண்டிருக்கும் அற்புத பிறவி தான் ஆரூரன். கல்வியில் பொறியியலாளர். இனப்பற்று கொண்டவர். 42 வயது இளைஞர்.
1. யாழிசை – நாவல் – சாகித்ய விருது – முதலிடம்
2. யாவரும் கேளிர்- நாவல் – சாகித்ய விருது – சான்றிதழ்
3. வலசைப்பறவைகள் – நாவல் – சாகித்ய விருது – சான்றிதழ் (ஜீவநதி வெளியீடு)
4. The innocent victims – நாவல் (ஜீவநதி வெளியீடு)
5. ஊமை மோகம் – நாவல் – வடமாகாண சிறந்த நாவல் – முதலிடம் (ஜீவநதி வெளியீடு)
6. பூமாஞ்சோலை – சிறுகதை (ஜீவநதி வெளியீடு)
7. ஆதுரசாலை – நாவல் – சாகித்ய விருது – முதலிடம் – வடமாகாண சிறந்த நாவல் – முதலிடம் (ஜீவநதி வெளியீடு)
உதயணன் விருது இருதடவை
எழுதும் அனைத்துக்கும் விருது பெறும் படைப்பாளி.
இவ்வாறான பல படைப்பாளிகள் விமர்சகர்கள் கண்களுக்கு தெரியாமல் போவது அவர்கள் விமர்சனம் தொடர்பான சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. எமக்கு பிடித்தவர்களை கொண்டாடும் விமர்சனங்களே இன்று வெளியாகி வருகின்றன… அமைதியான முறையில் இலக்கியம் படைத்து வரும் ஆரூரன் போன்ற இலக்கிய வாதிகள் கண்டும் காணாமல் விடப்படுகிறார்கள். ஆனால் ஆரூரன் போன்ற செயற்பாட்டு வீரர்களுக்கு இது பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்கள் தம்மால் முடிந்த தமிழ் இலக்கிய பணியை ஆற்றுகிறார்கள்.
ஆனால் நடு நிலை விமர்சகர்கள் ஒரே படைப்பாளர்களை மாத்திரம் பிரஸ்தாபிக்காமல் இவர்களையும் படிக்க வேண்டும்.
ஆரூரனின் வெளிவர உள்ள நூல்கள்
சிறுகதை தொகுப்பு
ஹைக்கூ தொகுப்பு
மகாபாரதம் (நினைக்க முடியாத பிரமாண்ட படைப்பு )
க. பரணி