May 31, 2023 4:44 pm

சென்னை புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி.6ம் தேதி புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. புத்தக திருவிழாக்காக 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

16,17,18ல் சர்வதேச புத்தக காட்சியாக நடக்கும் நிலையில் இலங்கை உட்பட 40 நாடுகளின் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர். புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனவரி 18ம் தேதி வரை நடைபெறும். சென்னையின் 46-வது சர்வதேச புத்தகக் கண்காட்சியை வருகின்ற 2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரும் புத்தக கண்காட்சிக்கு வருகை தர இருப்பதால், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 6-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த தொடக்கவிழாவில் 6 பேருக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும் முதலமைச்சர் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வருட புத்தக் கன்காட்சியில் புதுமையாக, ஜனவரி 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை சர்வதேச புத்தகக்காட்சி நடைபெறுகிறது.

தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்