அண்ணாந்து பார்த்த
போதெல்லாம்
ஆகாயம் பார்த்ததில்லே
அம்மா முகம் தான் பார்த்திருக்கும்….!
ஆயிரம்தான் வேதனை
அலை அடிச்சு பார்த்தாலும்
அன்புதான்டி உன்னிடத்தில்
அழகாக பூத்திருக்கும்….!
வயிற்றுக்குள்ள பசித்தீ
வாட்டி எடுக்கையிலே
கண்ணுக்கு குளுர்ச்சியா
கலர் கலரா பலூனு
காட்சி தந்து என்ன லாபம் ….!
ஊரேல்லாம் திருவிழா
ஓகோன்னு நடக்குதடி
ஒருபிடி சோத்துக்குத்தா
உங் குழந்தை அழுகுதடி…..!
பலூனு வித்தாக்கா
பசியாத்த வழி கிடைக்கும்
பாவி நீ என்ன செய்வே
பத்தினி வம்சமடி….!
ஒழுக்கமும் உழைப்புமே
உசிரவிடப் பெருசன்னு
ஊருக்கு சொல்லுகிற உன்ன
தேருக்குள் வச்சு தெய்வமா கும்பிடனும்….!
நன்றி : மயிலாடுதுறை விமலாநாகேஷ் | தேன் சிட்டு.காம்
