எந்தக்குழந்தை அழுததோ | கவிதை | கி.ரவிக்குமார்

இந்த உடம்பில் இறைவன்
காற்று ஊதிக் கொடுக்க!

சிரிக்க சிரிக்க
கன்னம் உப்புகிறது
வளர்பிறைக்கு!

எனக்கு முன்னால் விழித்து
இன்றும் காத்திருந்தது
ஒரு பகல்

காலையில் அந்த வீட்டுக்குள்ளும்

மாலையில் இந்த வீட்டுக்குள்ளும்
இருக்கிறது மதில்சுவரின் நிழல்.

குழந்தைகளின் ஓவியங்களில்
மரங்கள் இருக்கும் வரை
உயிர்ப்புடன் இருக்கும் பூமி!

புலம் பெயர்ந்த
சாலைகள் எங்கும்
கிருஷ்ண பாதங்கள்.

தூங்குவதற்கும்
விழித்திருப்பதற்கும்
இடைப்பட்ட போராட்டமாக
வாழ்க்கை!

 

நன்றி : கி.ரவிக்குமார் | தேன்சிட்டு

ஆசிரியர்