இடுப்புவலி போக்கும் சிறப்பான மருந்து.

இன்றைக்கு பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

அத்தகைய இடுப்பு மற்றும் முதுகு வலியை குணப்படுத்த எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்த வேண்டும்?
10 எலுமிச்சை பழங்களை எடுத்து நீரில் கழுவி, அதன் தோலை சீவி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதனுடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து 15 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.
அதன் பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலி உள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊறவைத்து காலையில் எடுத்தால் வலி மறையும்.
அப்படி இல்லையெனில் எலுமிச்சை பழங்களின் தோலை சீவி, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைத்தால் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.
எலுமிச்சையின் நன்மைகள்
எலுமிச்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கிறது.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதுடன், கொழுப்புக்களை எளிதில் கரைத்து உடல் எடையை குறைக்கிறது.
எலுமிச்சையில் உள்ள விட்டமின் C, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகள் மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
உயர் ரத்த அழுத்த பிரச்சனை, பல்வலி மற்றும் ஈறு நோய்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் 1 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

ஆசிரியர்