பித்தப்பை கற்களை குணப்படுத்த செய்ய வேண்டியவை.

முதல் 5 நாட்கள்
பித்தப்பை கற்களை அகற்ற முதல் 5 நாட்களுக்கு, 4 டம்ளர் ஆப்பிள் சாறு குடிக்கலாம். அல்லது 4-5 அப்பிளை பழமாக சாப்பிடலாம். இந்த 5 நாட்களில் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால், பித்தக்கற்கள் மென்மையாக கரைய ஆரம்பிக்கும்.

6 ஆவது நாள்
ஆறாவது நாளன்று இரவில் உணவு சாப்பிடுவதை தவிர்த்து, மாலை 6 மணிக்கு சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எப்சம் உப்பைக் கலந்து குடிக்க வேண்டும்.

அதேபோல் அன்று இரவு 8 மணிக்கு மறுபடியும் குடிக்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள மெக்னீஷியம் சல்பேட் பித்தத்தை குறைக்கிறது.

பின் இரவு 10 மணிக்கு 1/2 கப் ஆலிவ் எண்ணெய் அல்லது எள் எண்ணெயை எடுத்து அதில் 1/2 கப் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து குடிக்க வேண்டும்.

ஏழாவது நாள்
1 முதல் 6 நாட்கள் மேல் கூறிய சிகிச்சையை சரியாக செய்து வந்தால், ஏழாவது நாள் காலையில் மலம் கழிக்கும் போது பச்சை நிறக் கற்கள் வெளியேறிவிடும் என்று சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பு
பித்தக்கற்கள் இருக்கக்கூடிய எந்த அறிகுறிகள் தென்படாவிட்டாலும் இந்த சீன சிகிச்சை முறையை பின்பற்றலாம். இதனால் பித்தப்பை சுத்தமாக இருக்கும் என்று சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆசிரியர்