செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் வியர்வை மணம் நீக்கும் கோரைக்கிழங்கு

வியர்வை மணம் நீக்கும் கோரைக்கிழங்கு

1 minutes read

கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட பல மருந்துகளில் கோரைக்கிழங்கு சேர்கின்றது. அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.

  • கோரைக்கிழங்கை அரைத்து அந்த பொடியை உடலில் பூசினால், வியற்வை நாற்றம் வராது. இயற்கையாக வீட்டிலேயே தயார் செய்யும் குளியல் பொடியில் இதனை கலந்து பயன்படுத்தலாம்.
  • கோரைக்கிழங்கை பாலுடன் அரைத்து பசையாக்கி தலைக்கு பூசினால் ஞாபக சக்தி அதிகரிக்கும். காய்ச்சல், வலிப்பு நோய், பைத்தியம் பிடித்த நிலை போன்றவை குணமாகும்.
  • தேள், குளவி போன்றவை கடித்தால், கோரைக்கிழங்கை பற்றாக போடலாம். இதனால் விஷத்தன்மை இறங்கும்.
  • கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களை நன்றாக வளர்ச்சியடைய செய்ய இந்த கோரைக்கிழங்கு உதவுகிறது. தாய்ப்பால் குறைவாக உள்ள தாய்மார்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இட பால் நன்றாக சுரக்கும்.
  • கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு ½ தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்.
  • இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப்படும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.