May 31, 2023 5:17 pm

ஆஸ்துமாவிலிருந்து விடுபட எடுக்க வேண்டிய உணவு.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சாதாரண மூச்சு திணறல் இருக்கும் போதே இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அத்தகைய ஆஸ்துமாவை குணமாக்க என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதனை தினமும் பின்பற்றி ஆஸ்துமாவில் இருந்து விரைவில் விடுபடுங்கள்.

தேன்

நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.

கீரை

கீரைகளில் இருக்கும் ஃபைட்டோகெமிக்கல் ஆக்சிஜனேற்ற சேதம், நுரையீரல் வீக்கம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு பாதுகாக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.மேலும் கீரையில் உள்ள வைட்டமின் பி சத்து, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் ஆஸ்துமாவை குறைக்க உதவுகிறது.

இஞ்சி

இஞ்சி சளி, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் குணமுடையது. மேலும் இஞ்சியை நசுக்கி அதனை சுடுநீரில் போட்டு குடித்தால் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும்.மேலும் தினமும் உணவு மற்றும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதால் ஆஸ்துமா குணமடைகிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

அவகாடோ

அவோகேடாவில் வைட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின், பேன்டோதெனிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம்.

பரட்டைக்கீரை

பரட்டைக் கீரையில் பீட்டா கரோடின் அதிகமாக உள்ளது. மேலும் இதில் உள்ளசக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் பைதோ கெமிக்கல் உடலில் உள்ள ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்கவும், வருங்காலத்தில் உருவாக இருக்கும் ஆஸ்துமா அறிகுறிகளைத் தடுக்கவும் உதவுகின்றது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் ஆஸ்துமா போன்ற சுவாச தொடர்பான தொந்தரவுகள் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.

வாழைப்பழம்

வெங்காயத்தில் ஆஸ்துமாவைப் போக்கும் தன்மை மற்றும் அழற்சியைக் குறைக்கும் தன்மை உள்ளது. ஹிஸ்டமின் வெளியேற்றத்தைத் தடுக்கிறது. மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பைக் குறைக்கிறது.

பச்சைப் பால்

ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்குவதற்கு சிறந்த பொருள் காய்ச்சாத பச்சை பால். ஆகவே இதனை தினமும் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா பாதிப்பு முற்றிலும் போக்கப்படுகிறது.

மஞ்சள்

மஞ்சள் இரத்த நாளங்களைத் விரிவாக்க உதவுகிறது மற்றும் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. ஆகவே ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் ஒரு சிறந்த பொருள் மஞ்சள் ஆகும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்