கடுக்காய் உடலில் நன்கு பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
கடுக்காய் வாய், தொண்டை, இரைப்பை, குடல் ஆகிய இடங்களில் உள்ள ரணங்களை ஆற்றிடும் வல்லமை பெற்றது.
உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்.
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும்.
கண்களை சுற்றியுண்டாகும் கருவளையத்தை போக்க கடுக்காய் சிறந்தது. கடுக்காய் பொடியை பன்னீரில் கலந்து கண்களை சுற்றி பூசவேண்டும்.
பயன்படுத்தும் முறை
நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர வேண்டும்.
இப்படி தொடர்ந்து உண்டு வந்தால் மேற்கூறிய 26 நோய்களில் இருந்தும் முற்றிலும் விடுபட்டு நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழலாம்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW