Tuesday, May 17, 2022

இதையும் படிங்க

சுளுக்கு என்பதென்ன

நாம் நம் கடந்து வந்த பகுதி வாழக்கையில் இந்த வார்த்தையை பிறர் மூலம் கேட்டோ அல்லது நாமோ உணர்ந்து வந்து இருப்போம். கால் சுளுக்கு என்றால் என்ன, சுளுக்கு உடலில்...

சவ்வு தேய்மானம், விலகல் என்றால் என்ன

இந்த சவ்வு போன்ற பகுதியை ஆங்கிலத்தில் Ligament என்று அழைப்பர். இது போன்ற வார்த்தைகளை சொல்லி வலியின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை மீண்டும் புரியாத ஒரு வார்த்தையைச் சொல்லி துன்பப்படுத்த...

மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு

வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும்.

பாக்டீரியாவை எதிர்க்கும் பூண்டு

பூண்டில் ஆற்றல் மிக பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா...

பேரிக்காயின் மருத்துவ குணம்

பேரிக்காய் பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும்....

எள்ளின் மருத்துவ பயன்கள்

உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும்.மலத்தை இறுக்கும். வாயுவால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் போக்கும்.எள் நல்ல உணவுப் பொருள். எள்ளுப் பொடி சேர்த்துப்...

ஆசிரியர்

வைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’!

எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்புக்கு வைட்டமின் டி அவசியமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியது. எடை இழப்பிற்கும் வழிவகுக்கக்கூடியது. அதேவேளையில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் எலும்புகள் பலவீனமாகி விடும். எலும்பு சிதைவுகள், மனநல பிரச்சினைகள் மற்றும் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

அதனால் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது. உடல் பருமன், நீரிழிவு போன்றவை வைட்டமின் டி குறைபாடு இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு முடிவின்படி, வாய்வழி ஆரோக்கியத்தின் மூலமும் வைட்டமின் டி குறைபாட்டை அறிந்து கொள்ளலாம்.

அடிக்கடியோ அல்லது தொடர்ச்சியாகவோ வாய், உதடுகள் மற்றும் நாக்கில் வலியோ அசவுகரியமோ உண்டானால் அதுவும் வைட்டமின் டி பற்றாக்குறைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக அமையலாம். கன்னத்தின் உள் அடுக்கு பகுதிகளிலும் பாதிப்பை உணர முடியும். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு கடுமையாக இருக்கும்.

நாக்கில் எரிச்சல் உணர்வு, வாயின் உள் அடுக்கு பகுதியில் வலி, தொண்டை வலி, தொண்டை வறட்சி, வாயில் உணர்வின்மை, நாக்கு கூசுதல், சாப்பிடும்போது உணவின் சுவை மாறுபடுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.

எவ்வாறு சரி செய்யலாம்?

சூரிய ஒளியில் தினமும் குறிப்பிட்ட நேரம் செலவிடுவது, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் டி மாத்திரைகள், மருந்துகள் சாப்பிடுவது மட்டும் போதாது. வைட்டமின்கள் உடலில் சரியாக உறிஞ்சப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மீன், தயிர், குறைந்த கொழுப்புள்ள பால், காளான், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளான பச்சை இலை காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை சேர்ப்பதன் மூலம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கலாம்.

வளர்சிதை மாற்றம் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்கும் செயல்முறையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

வைட்டமின் கே, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற மற்ற ஊட்டச்சத்துக்கள் மீதும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இந்த ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் டி உறிஞ்சுதலை துரிதப்படுத்தும்.

கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலோ, ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை தவிர்த்தாலோ உடலில் வைட்டமின் டி ஆழமாக உறிஞ்சப்படாது. வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடியது. அது உடலில் உறிஞ்சப்படுவதற்கு ஆரோக்கியமான கொழுப்பு தேவைப்படுகிறது. நெய் அல்லது எண்ணெய்யை அளவாக எடுத்துக்கொள்வது ஒருபோதும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

பால் பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தானிய வகைகளையும் உணவில் தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும்.

மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் அவசியமானது. ஏனெனில் மன அழுத்த ஹார்மோன்கள் வெளிப்படும்போது,​ அது குடலை பாதிக்கும். ஏனெனில் குடலில்தான் வைட்டமின் டி உறிஞ்சப்படுகிறது. அதனால் அதன் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியமானது.

இதையும் படிங்க

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இரவு உணவை 8 மணிக்கு முன் சாப்பிட்ட வேண்டும்?

இரவு உணவை மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்ளும்போது, அது நம்முடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கெட்டுப் போகும். தாமதமாக சாப்பிடுவதன் மூலம் முதலில் கெட்டுப் போவது நம்முடைய தூக்க சுழற்சி....

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி தரும் நன்மைகள்

உடற்பயிற்சியில் மிகவும் சிறந்த வடிவம் நடைப்பயிற்சி ஆகும். தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.

பக்கவாத பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை

கொரோனா தொற்று பாதிப்பு காலகட்டத்தில் பக்கவாதம், முடக்குவாதம், முதுகுத்தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டவர்கள்.. முறையான சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள இயலாத...

மூட்டுவலியை தவிர்க்கும் முறைகள்

நீங்கள் நடக்கும் போது பல்வேறு விசைகள் உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. அதில் முக்கியமான ஒன்று புவிஈர்ப்பு விசை. இந்த விசை நம் உடலில் இயங்கவில்லை என்றால் நாம் ஆகாயத்தில் மிதந்து...

முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்

உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சிக்கன் ஊறுகாய்

தேவையான பொருட்கள் எலும்புகள் இல்லாத சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 8 மேசைக்கரண்டி

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி...

சருமத்தை சுத்தமாக வைக்க குறிப்புகள்

தினமும் குளிப்பதால், தோலின் மேலே இருக்கும் அழுக்குகள் வெளியே வரும். ஆனால், நாள் முழுவதும் வெளியே சுற்றுவர்களுக்கு இது பொருந்தாது. அழுக்குகள் சரும துவாரங்களின் வழியே...

மேலும் பதிவுகள்

பிரதமர் பதவிக்கு மூவரை பரிந்துரைக்க சுயாதீன உறுப்பினர்கள் குழு தீர்மானம்

 பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 53 உறுப்பினர்களைக் கொண்ட குழு தீர்மானித்துள்ளது. 11 கட்சிகளின் உறுப்பினர்கள்...

தீர்வுகளை வழங்குவதற்கு முன்னர் உண்மையைக் கூறத் தொடங்குவதே பொருத்தமானது|ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊழியர்கள் விடுமுறை நாட்களைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பணியாற்ற தயாராக இருக்குமாறு அறிவித்துள்ளார். பிரதம செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்று...

வட கொரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவு

கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக வட கொரியா முதன்முதலாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவியுள்ளதாக வட கொரியா நேற்றைய தினமே முதன்முதலாக அறிவித்திருந்ததுடன், இன்று முதல் மரணம்...

வருமானம் தடையில்லாமல் வருவதற்கு லட்சுமி குபேர பூஜை

பணம் என்பது நமது வீட்டில் தடையில்லாமல் வந்து கொண்டிருந்தால் மட்டுமே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். பணம் வருவதில் ஏதேனும் தடை ஏற்பட்டு விட்டால்...

மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு

வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும்.

உக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா

கடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது சாஸ்திரப்படி முறையாகாது.

பிந்திய செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

துயர் பகிர்வு