இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக் கூடாது.
காலையும், மாலையும் சேரும் சந்தியா காலங்களிலும் நடுஇரவு நேரத்திலும் எதையும் சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு தீபத்தின் வெளிச்சம் இல்லாமல் எதையும் சாப்பிடக்கூடாது.
இரவுநேரத்தில் எள் சாதமும், பகல் நேரத்தில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது. வடை, பாயசம் இரண்டையும் தனக்கென்று தயார் செய்து சாப்பிடாமல் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிடவும்.
எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலைதவிர)
வாய்க்கு சென்ற அன்னத்தின் மிகுதியையும், பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது.
இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக் கூடாது.
வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது. பசுவின் பாலைவிடத் தூய்மையான உணவு எதுவும் கிடையாது.
நன்றி | மாலை மலர்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW