இயற்கை வைத்தியம்
பைல்ஸ் பிரச்சனை இருந்தால், அதனை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை முற்றி நாள்பட்ட இரத்த கசிவு, திசுக்களின் இறப்பு மற்றும் ஆசன வாய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பைல்ஸ் பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
ஐஸ்
பைல்ஸ் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை எனில் அது ஐஸ் தான். ஐஸ் கொண்டு அவ்விடத்தை ஒத்தனம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு 10 நிமிடம் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு கூட பைல்ஸ் சிகிச்சைக்கு உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றில் காட்டனை நனைத்து, அதனை மெதுவாக ஆசனவாயில் தடவ வேண்டும். ஆரம்பத்தில் எரிச்சல் இருந்தாலும், கடுமையான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை தடவ வேண்டும்.
பாதாம் எணணெய்
பாதாம் எண்ணெய்க்கு பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும் குணம் உள்ளது. ஆகவே சிறிது காட்டனை எடுத்து, அதனை பாதாம் எண்ணெயில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த செயலை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
தண்ணீர்
முக்கியமாக பைல்ஸ் உள்ளவர்கள், தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும். ஒருவேளை தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், கடுமையான இரத்தக் கசிவு மற்றும் வலியை உணரக்கூடும்.