Sunday, June 26, 2022

இதையும் படிங்க

துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய்...

ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிடலாம்…

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் என்பது டாக்டர்களின் பரிந்துரையாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை ஆப்பிளுக்கு...

சீரகத்தினால் ஏற்படும் நன்மை

சமையலுக்கு பயன்படும் சின்னசீரகம் உடல் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீங்கிவிடும். இந்த வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து,...

கைகள் குளிர்ந்து போய் இருக்கிறதா?

குளிர்காலத்தில் பொதுவாக கைகள் குளிர்ந்த நிலைக்கு மாறிவிடும். ஆனால் சிலருக்கு எப்போதுமே கைகள் குளிர்ந்துபோய் இருக்கும். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ரத்தசோகை,...

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த நெல்லிக்காய்

வேறு எந்த வகை காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் 'சி' 600 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம்,...

ராம்சே ஹன்ட் சின்ட்ரோம் எனப்படும் முக வாத நரம்பியல் பாதிப்பிற்கான சிகிச்சை

இன்றைய திகதியில் உலகின் பிரபலமான பொப் இசை பாடகரும், மேலைத்தேய இசை கலைஞருமான ஜஸ்டின் பீபர் என்ற இசைக் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கும் அரிய பாதிப்பு காரணமாக ராம்ஸே ஹன்ட் சின்ட்ரோம்...

ஆசிரியர்

உங்கள் மண்ணீரல் நன்றாக இயங்காவிட்டால்…

மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்தால்தான் நோயின்றி வாழ முடியும். அப்படி சிறப்பாக செயல்பட வேண்டிய உள் உறுப்புகளில் முக்கியமானது, மண்ணீரல்.

இது கல்லீரலுக்கு அருகில் இருக்கிறது. நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது, ரெட்டிக்குலார் செல்கள் மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளால் ஆன வலைப்பின்னல் அமைப்புக் கொண்டது.

முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களை அழிப்பதே மண்ணீரலின் முக்கியப் பணியாகும். மேலும், ரத்த சிவப்பணுக்களின் செயல்களைச் சீர்ப்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் இதன் வேலைதான்.

மண்ணீரல் பாதிக்கப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். நுரையீரலின் செயல்பாடுகளிலும் மண்ணீரலுக்குப் பங்கு உண்டு.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மண்ணீரல் தூண்டுகிறது. அதேபோல் ரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப்பொருட்களை வடிகட்டி வெளியேற்றவும் செய்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மண்ணீரல் அதிகரிக்கிறது. வியர்வைச் சுரப்பிகளையும் தூண்டி செயல்படவைக்கிறது.

மண்ணீரல் பாதிப்பின் அறிகுறிகள்:

உடம்பின் எடை அதிகரிப்பது, அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படுவது, நாக்கு வறண்டு விறைப்புத்தன்மையை அடைவது, வாயுக்களால் உடம்பெங்கும் வலி உண்டாவது, வாந்தி, உடல் பலவீனமடைவது, உடல் பாரமாகத் தெரிவது, கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்டவுடன் தூக்கம், எப்போதும் சோர்வு, மஞ்சள் காமாலை ஏற்படுவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, சிறுநீர் சரியாகப் பிரியாமல் இருப்பது போன்றவைகள் எல்லாம் மண்ணீரல் பாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறியாகும்.

மண்ணீரல் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்?

  • அடிக்கடி கோபம், எரிச்சல், மனஅழுத்தம் அடைவோருக்கு மண்ணீரல் பாதிப்படையலாம்.
  • மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும்.
  • கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.
  • ரத்தத்தில் பித்தநீர் அதிகரிப்புக் காரணமாகவும் மண்ணீரல் பாதிப்படையலாம்.
  • கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் ஆகியவையும் மண்ணீரலைப் பாதிக்கும்.
  • கீரைகள், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைகட்டிய பயறு, சின்ன வெங்காயம் போன்றவை மண்ணீரலுக்கு நலம் பயக்கும். பழவகைகளில் கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்றவை மண்ணீரலுக்கு உகந்தது.

மகத்துவம் நிறைந்த மண்ணீரல் மீது அதிக அக்கறை கொள்வோம். அதற்கு ஏற்றபடி வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக் கவழக்கங்களை மாற்றிக்கொள்வோம்.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும் கருஞ்சீரகம்

நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

கேரட் அதிகளவில் உண்டால் பக்கவிளைவுகள் வருமா?

கேரட்டை பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது. "அளவுக்கு...

சமைக்காத உணவின் பயன்கள்

நவீன மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் அதே வேளையில் பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சமைத்து சாப்பிடும் உணவை...

சன் சார்ஜ் தண்ணீர் பக்கவிளைவற்ற மருந்து

சன் சார்ஜ் தண்ணீர் இதை பற்றி உங்களுக்கு தெரியுமா அதி அற்புதமான பக்கவிளைவற்ற மருந்தாக ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட இது விட்டமின் நிறைந்த அருமருந்து. ...

சக்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்களிலொன்று

சக்கரை நோயாளிகள் கிளைஸிமிக் இண்டக்ஸ் ( Glycemic index) குறைவாக இருக்கும் பழங்களைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக அன்னாசி பழத்தில் சிறிது அதிகமாக...

உடலுக்கு யோகா… உள்ளத்துக்கு தியானம்…

உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் உடல் ஆரோக்கியமாகவும், உள்ளம் அமைதியாகவும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் நோயும் மனக்கவலையும் அதிகரித்துக்கொண்டே...

தொடர்புச் செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெண்களை கவரும் குளியல் அறையை ‘பளிச்’ என மாற்றும் தொழில்நுட்பங்கள்

ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர்...

கேரட் அதிகளவில் உண்டால் பக்கவிளைவுகள் வருமா?

கேரட்டை பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது. "அளவுக்கு...

சிக்கன் போண்டா

தேவையான பொருட்கள் : சிக்கன் கைமா – கால் கிலோ, சின்ன வெங்காயம் –...

மேலும் பதிவுகள்

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்?

ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும். வைரத்தை யார் தான் விரும்ப...

பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையேயான பாசப்பிணைப்பு

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

பத்தே நிமிடத்தில் சுடச்சுட பீட்ரூட் பஜ்ஜி

தேவையான பொருட்கள் கடலை மாவு – 1 கப், பீட்ரூட் – 2 பெரியது

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடையை நீக்கும் பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல...

பிந்திய செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள்...

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரண்டு தெரிவுகளே உள்ளனவென்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். அதுகுறித்து மேலும் தெரிவித்தஅவர்,

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது.

துயர் பகிர்வு