செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தூக்கத்திற்கான வழிகள்

தூக்கத்திற்கான வழிகள்

1 minutes read

அதிகத் தடிமன் உள்ள தலையணையும் வேண்டாம்; மிகவும் மென்மையான தலையணையும் வேண்டாம். மிதமான தடிமன் உள்ள, பருத்தியாலான தலையணை
களைத் தேர்ந்தெடுங்கள். தலையணை உறையை அடிக்கடி மாற்றுங்கள். படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்கட்டும்.

*இரவு மிதமான, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவுக்குப் பின்னர் காபி, டீ, சாக்லேட் அறவே வேண்டாம். இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும். மூளையைப் பாதிக்கும்.

*உடற்பயிற்சி செய்யும்போது, உடல் முழுவதும் சோர்வு அடையும். அது நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

*எலெக்ட்ரானிக் திரைகளில் இருந்து வெளியேறும் நீலவண்ண ஒளி, உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும் இயல்புடையது. எனவே, தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே, டி.வி., கம்ப்யூட்டர், டேப்லெட், செல்போனை அணைத்துவிட வேண்டும்.

*படுக்கை என்பது தூங்க மட்டுமே என்கிற கொள்கையைப் பின்பற்றுங்கள். படுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்ப்பது, குழந்தையின் ஹோம்வொர்க் செய்வது, டி.வி பார்ப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

*முதுகுவலி உள்ளவர்கள், காலுக்கு இடையே தலையணையை வைத்துத் தூங்க முயற்சிக்கலாம். இதனால், முதுகுவலியால் தூக்கம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

*கழுத்தை சரியான நிலையில்வைத்துத் தூங்கவேண்டியது அவசியம். படுத்துக்கொண்டு டி.வி பார்க்கக் கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும். முடிந்தவரை படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க வேண்டாம்.

*புகையும் மதுவும் தூக்கத்தை மட்டும் அல்ல, உடல்நலத்தையே அழிக்கும் தீய பழக்கங்கள். மதுவின் போதையில் மயங்கிக்கிடப்பது தூக்கம் அல்ல. மதுவால், ஆழமான தூக்கத்தைக் கொடுக்க முடியாது. மேலும், புகையும் மதுவும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

*உடலின் கடிகாரத்தைச் சீராக்குங்கள். சாப்பிடுவது, படுக்கைக்குச் செல்வது, எழுவது என அனைத்தையும் அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்குங்கள். நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள்.

நன்றி தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.