செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தொண்டை வலி குணமாக பாட்டி வைத்தியம்

தொண்டை வலி குணமாக பாட்டி வைத்தியம்

1 minutes read

நாட்டுமருத்துகடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தை( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த கலவை ) சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும்.

சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு அந்நீரை சிறிது ஆறவிட்டு பின்னர் தொண்டையில் படும்படி வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பு நீங்கும்.

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலியும் நீங்கும்.

திரிகடுகம் என அழைக்கப்படும் சுக்கி, மிளகு, திப்பிலி மூன்றையும் வறுத்து நன்கு பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும்.

வெதுவெதுப்பான நீரில் உப்பு சிறிதளவு சேர்த்து தொண்டையில் படும்படு அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்.

சிறிதளவு வசம்பை எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் தொண்டை வலி குறையும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.