செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் இயற்கை மருத்துவ குறிப்புக்கள்

இயற்கை மருத்துவ குறிப்புக்கள்

1 minutes read

பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம் பெறும்.

முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காவையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திக்கீரை நல்ல உணவு.

எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலி தீரும்.

அத்திப்பழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.