த ஹிந்துப் பத்திரிகை எனது செவ்வியைத் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளது : சி.வி.விக்னேஸ்வரன்த ஹிந்துப் பத்திரிகை எனது செவ்வியைத் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளது : சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் அரசாங்கம் இன்னமும் தெளிவாக எதனையும் கூறவில்லை. ஆனால் எங்களுடைய அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நாங்கள் தெரிவிக்கின்ற போது அதில் பிழை கண்டுபிடிக்கின்றார்கள். இதுவே காலத்திற்குக் காலம் அரசாங்கங்களின் நடவடிக்கைகளாக இருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகின்ற சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழரும், சிங்களவரும் கணவன் – மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எப்பொழுதுமே தெரிவிக்கவில்லை. த ஹிந்துப் பத்திரிகை எனது செவ்வியைத் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் தமிழ்த் தேயசிக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிரியர்