Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மஹிந்த சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இல்லை | விக்கினேஸ்வரன்மஹிந்த சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இல்லை | விக்கினேஸ்வரன்

மஹிந்த சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இல்லை | விக்கினேஸ்வரன்மஹிந்த சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இல்லை | விக்கினேஸ்வரன்

2 minutes read

வட­மா­காண சபையில் தாங்கள் செயற்­பட முடி­யாத வகையில் பல்­வேறு முட்­டுக்­கட்­டைகள் போடப்­ப­டு­வ­தா­கவும், வட­மா­காண சபையின் அலு­வ­ல­கத்தில் பணி­யாற்­று­கின்ற அலு­வ­லர்­க­ளி­னா­லேயே இந்த முட்டுக்­கட்­டைகள் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

மஹிந்த சிந்­த­னையை முன்­வைத்து வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­வர்­களை மக் கள் நிரா­க­ரித்­து­விட்­டனர். மஹிந்த சிந்­தனை என்ற தனிப்­பட்ட ஒரு­வ­ரு­டைய சிந்­த­னை­யையும் செயற்­பா­டு­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும் என்ற தேவை எங்­க­ளுக்கு கிடை­யாது என்றும் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

வட­மா­காண சபை பத­வி­யேற்று இரண்டு மாதங்­க­ளா­கின்­றன. இந்த நிலையில் அந்த சபையின் செயற்­பா­டு­களில் என்ன வகை­யான முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன என கேட்­ட­போதே முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் இவ்­வாறு பதி­ல­ளித்­துள்ளார்.

வவு­னியா பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கத்தின் அழைப்பின் பேரில் கிரா­மிய அபி­வி­ருத்தி வங்­கிக்­கி­ளை­யொன்றை திறந்து வைப்­ப­தற்­காக நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் வவு­னி­யா­வுக்கு வருகை தந்­தி­ருந்தார்.

பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கத்தின் கிரா­மிய வங்கிக் கிளை­யொன்றை முத­ல­மைச்சர் திறந்து வைத்து வங்கி நட­வ­டிக்­கை­களை வைபவ ரீதி­யாக ஆரம்­பித்து வைத்தார். அத­னை­ய­டுத்து அங்கு நடை­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்­றினார். பின்னர் அவர் வவு­னியா நூல­கத்­திற்குச் சென்று நூல­கத்தைப் பார்­வை­யிட்டார். அப்­போது, அவ­ரிடம் வட­மா­காண சபையின் செயற்­பா­டுகள் குறித்து கேட்­ட­போதே, மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

வட­மா­காண சபையின் செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டி­ருக்கின்றது எனக் கூற முடி­யா­தி­ருக்­கின்­றது. ஏனென்றால் நாங்கள் அங்கு செயற்­பட முடி­யா­த­வாறு முட்­டுக்­கட்­டைகள் போடப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அங்கு பணி­யாற்­று­கின்ற அலு­வ­லர்­க­ளி­னா­லேயே இந்த முட்­டுக்­கட்­டைகள் போடப்­ப­டு­கின்­றன. இதுதான் பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது.

மத்­திய அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களே அலு­வ­லர்­க­ளாக கட­மை­யாற்­று­கின்­றார்கள். அவர்கள் இது­கால வரை­யிலும் ஆளு­னரின் சொற்­படி, அவ­ரு­டைய ஆணைக்குக் கட்­டுப்­பட்டு பணி­யாற்றி வந்­துள்­ளார்கள். இப்­போது நாங்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் செயற்­ப­டும்­போது, ஆளு­னரின் அனு­ம­தியைப் பெற வேண்டும், அவ­ரு­டைய அனு­ம­தி­யில்­லாமல் செயற்­பட முடி­யாது என்று முட்­டுக்­கட்டை போடு­கின்­றார்கள்.

நாங்­க­ளாக ஏதேனும் பணி­களைச் செய்­தாலும், அவற்­றிற்கு ஆளு­னரின் அனு­மதி பெறப்­பட வேண்டும் என்று குழப்­பு­கின்­றார்கள். இந்த விடயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்கவின் கவ­னத்­திற்கு நாங்கள் கொண்டு வந்­துள்ளோம். அவர் இது­பற்றி ஜனா­தி­ப­தி­யுடன் பேசி ஒரு தீர்வு காண்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

ஒருங்­கி­ணைப்பு குழுவின் இணைத்­த­லைமை

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களின் அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது. அது­பற்றி அதி­கா­ரிகள் எங்­க­ளிடம் கலந்து பேச­வில்லை. அழைப்பு மாத்­திரம் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது, மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு தலை­மையின் கீழ் இந்தக் கூட்டம் நடத்­தப்­ப­ட­வேண்டும். அவ்­வா­றி­ருக்­கையில் அந்த அதி­கா­ரிகள் ஜனா­தி­ப­தியின் எந்த அறி­வித்­த­லுக்­க­மைய செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பதைத் தெரி­விக்­கு­மாறு நாங்கள் கோரி­யி­ருந்தோம். கூட்­டத்தில் நாங்கள் கலந்து கொள்­ள­வில்லை.

இந்த நிலையில் ஒருங்­கி­ணைப்பு அபி­வி­ருத்­திக்­குழு கூட்­டத்­திற்கு என்­னையும் ஒரு இணைத்­த­லை­மை­யாக நிய­மித்து ஜனா­தி­பதி அனுப்பி வைத்த கடிதம் வந்து கிடைத்­தி­ருக்­கின்­றது.

அந்தக் கடி­தத்தில் மஹிந்த சிந்­த­னையின் அடிப்­ப­டை­யி­லான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இந்த இணைத்­த­லைமை வழங்­கப்­ப­டு­வ­தா­கவும், இந்தக் கூட்­டத்தில் மஹிந்த சிந்­த­னையைச் செயற்­ப­டுத்­து­கின்ற அதி­கா­ரிகள் கலந்து கொண்டு செயற்­ப­டு­வார்கள் என்றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மஹிந்த சிந்­த­னையை முன்­வைத்து வட­மா­காண தேர்­தலில் போட்­டி­யிட்­ட­வர்­களை மக்கள் நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றார்கள். நாங்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள். மஹிந்த சிந்­தனை என்ற தனிப்­பட்ட ஒரு­வ­ரு­டைய சிந்­த­னை­யையும் செயற்­பா­டு­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும் என்ற தேவை எங்­க­ளுக்குக் கிடை­யாது.

மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு சபை இருக்­கும்­போது, அபி­வி­ருத்திப் பணிகள் தொடர்­பாக மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தக் கூட்டத்திற்குத் தலைமைத்துவம் வழங்கிச் செயற்பட வேண்டிய தேவை என்ன என்பதும் தெரியாமல் இருக்கின்றது.

தமது மக்களுக்குப் பல தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருக்கின்றன. ஆனால் மக்களுடைய தேவைகளை அரசியலாக்கிச் செயற்படுவதை ஏற்க முடியாது. ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களுக்கு விளக்கம் தேவைப்படுகின்றது. எனவே இந்தக் கூட்டம்பற்றியும், இணைத் தலைமை பற்றியும் என்னை அழைத்துப் பேசியிருந்தால் அந்த விளக்கங்களை நான் கேட்டிருப்பேன். எனவே கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்குரிய விளக்கங்களைப் பெறாமல் எதனையும் செய்ய முடியாது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More