பாகிஸ்தானில் பெண் குழந்தை பெற்றெடுத்த 56 பேர் கொலைபாகிஸ்தானில் பெண் குழந்தை பெற்றெடுத்த 56 பேர் கொலை

 

பாகிஸ்தானில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த, 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் கூறியது:

பெண் குழந்தைகளை பெற்றெடுத்த, 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளது சமூக நெறிமுறைக்கு எதிரானது. ஜனவரி 2012 முதல் செப்டம்பர் 2013 வரை பாகிஸ்தானில் 90 பெண்கள் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகினர். 72 பேர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளனர். 491 பேர் உள்நாட்டு கலவரத்திலும், 835 பேர் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் செயல்களிலும் கொல்லப்பட்டுள்ளனர். 344 பேர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக மனித உரிமைகள் ஆணையம் குரல் கொடுக்கும். ஏழை மற்றும் பணக்கார மாணவ, மாணவிகளுக்கு சமமான கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களிடம் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டுவர முடியும். என்று ரஹ்மான் தெரிவித்தார்.

ஆசிரியர்