அசத்தும் சுட்டிப்பையன்அசத்தும் சுட்டிப்பையன்

இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இயல்புத் தன்மையை மீறி செயல்பட்டு குழந்தைகள் வியக்க வைக்கின்றனர். இங்கிலாந்தின் பாமிங்காம் பகுதியில் வசிப்பவர் 24 வயதுடைய ஹெல்தெர் தோர்பேக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. ஜோனாதன் என்ற பெயருடைய அந்த சிறுவன் பிறந்த போது 2.5 எடை இருந்தன. பிறகு அவனுடைய அனைத்து வளர்ச்சியும் மிகவும் அபரிதமாக மாறியது.

அதாவது ஏழாவது மாதத்திலேயே தானாக எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டானாம். மழலை மொழியில் பேசுவதுடன், மடிக்கணனியை இயக்க தொடங்கியுள்ளான்.

ரிமோட் கண்ட்ரோல் சாதனம் மூலம் டி.வி. சேனல்களை மாற்றி தனக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கின்றான்.

ஆத்துடன் விருப்பமான பாடல்களுக்கு ஏற்ப நடனமும் ஆடி அசத்துகின்றான்.

மகனின் இந்த வளர்ச்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ள தாய், அவனுடைய விவேகம், வலிமை, அறிவுத்திறன் வியக்க வைப்பதாகவும், எதையும்  விரைவாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார். இது தங்களுக்கு அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருகின்றது என்றும் தெரிவித்தார்.

 

ஆசிரியர்