Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புலிகள் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்கு இன்னல் | சனல்- 4 தொலைக்காட்சி கடமையை நிறைவேற்றியுள்ளது | சம்­பந்தன்புலிகள் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்கு இன்னல் | சனல்- 4 தொலைக்காட்சி கடமையை நிறைவேற்றியுள்ளது | சம்­பந்தன்

புலிகள் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்கு இன்னல் | சனல்- 4 தொலைக்காட்சி கடமையை நிறைவேற்றியுள்ளது | சம்­பந்தன்புலிகள் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்கு இன்னல் | சனல்- 4 தொலைக்காட்சி கடமையை நிறைவேற்றியுள்ளது | சம்­பந்தன்

5 minutes read

விடு­த­லைப்­பு­லிகள் இல்­லாத இக்­கால கட்­டத்தில் தமிழ் மக்கள் பார­தூ­ர­மான இன்­னல்­க­ளையும் கஷ்­டங்­க­ளையும் எதிர்­நோக்கி வரு­வ­தாகத் தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்­பந்தன் இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது இடம் பெற்ற மனித அவ­லங்கள்இ பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இங்­கி­லாந்தின் சனல் 4 தொலைக்­காட்சி ஊடகம் தனது கட­மையை நேர்­மை­யாக நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது என்றும் கூறினார்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கென அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­ வுக்­கு­ழுவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு நம்­பிக்கை கிடை­யாது என்­பதால் அதில் இணை­வ­தற்கு தயா­ரில்லை என்றும் சம்­பந்தன் எம்.பி. நேற்று தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

சம்­பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,

 

தவிர்க்கமுடியாது

மூன்று தசாப்த காலங்­க­ளாக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் அமைப்பின் ஆதிக்கம் இந்­நாட்டில் இருந்த நிலையில் அந்த அமைப்­பி­னது அழி­வுடன் நாட்டில் அமை­தியும் சமா­தா­னமும் ஏற்­பட்டு விடும் என்று அர­சாங்­கத்­தினால் நம்­பப்­பட்­டது. விடு­தலைப் புலி­களின் தோற்­ற­மா­னது தவிர்க்க முடி­யா­ததும் நியா­யப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­து­மா­கவே அமைந்­தி­ருந்­தது.

எனினும் எதேச்­சா­தி­கார செயற்­பா­டுகள் மற்றும் ஜன­நா­யக விரோத செயல்கள் ஆகி­ய­வற்றைக் கார­ணம்­காட்டி அந்த அமைப்பு உலகின் பல நாடு­க­ளிலும் தடை செய்­யப்­பட்ட அமைப்­பாக அறி­விக்­கப்­பட்­டது. புலிகள் அமைப்பை பொறுத்த வரையில் அந்த அமைப்­பா­னது முரண்­பா­டு­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தி­ருப்­ப­தா­கவும் அதே நேரம் இலங்­கையில் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யி­லான தீர்­வொன்று அவ­சி­யப்­பட்­டி­ருப்­பதும் உணர்த்­தப்­பட்­டது.

இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களை அழித்­து­விட்டால் நாட்டில் அமை­தியும் சமா­தா­னமும் நிலை பெற்­று­விடும் என்று கூறி­யது. எனி­னும்இ அந்த கருத்து பொருட்­ப­டுத்த முடி­யா­ததும் கேள்விக்­கு­ரி­ய­தா­கவும் அப்­போது இருந்­தது. இன்­றைய இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் பொறுப்­புப்­கூ­றுதல் மற்றும் நல்­லி­ணக்கம் ஆகிய இரு விட­யங்­களை தீர்­மா­னிக்க வேண்­டிய கட்­டத்தில் இருக்­கின்­றன. பொறுப்­புக்­கூ­று­தலில் உண்­மைத்­தன்மை வெளிக்­காட்­டப்­ப­டாத பட்­சத்தில் நல்­லி­ணக்கம் என்பது ஏற்­படப் போவ­தில்லை.

புலிகள் இல்லாத இக் காலத்தில்

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பு இருந்த காலத்­தி­னை­விட புலிகள் அமைப்பு இல்­லாத இக்­கால கட்­டத்­தி­லேயே தமிழ் மக்கள் பாரிய கஷ்­டங்­க­ளையும் இன்­னல்­க­ளையும் அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டதன் பின்னர் தமிழ் மக்கள் மீது எத­னையும் பிர­யோ­கிக்க முடியும் என்­பதும் எது­வென்­றாலும் தமி­ழர்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள் என்­ப­துமே இன்­றைய அர­சாங்­கத்தின் மனோ­நி­லை­யாக இருந்து வரு­கின்­றது. இன்­றைய நிலைமை போன்று புலிகள் இருந்த காலக்­கட்­டத்தில் இருக்­க­வில்லை என்­பதை இங்கு மீண்டும் வலி­யு­றுத்திக் கூறு­கிறேன்.

அச்ச உணர்வு

வடக்கில் இரா­ணுவப் பிர­சன்னம் ஆளு­ந­ரா­கவும் அரச அதி­ப­ரா­கவும் இரா­ணு­வத்தைச் சேர்ந்­த­வர்கள் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நிர்­வாக ரீதி­யிலும் இரா­ணு­வத்தின் ஈடு­பாடு அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வதால் அங்கு ஓர் அச்ச உணர்வு உண­ரப்­ப­டு­கின்­றது. அது மாத்­தி­ர­மின்றி தமிழ் அரச நிர்­வாக உத்­தி­யோ­கத்­தர்கள் தமிழ் மக்­க­ளுக்­கான உத­வி­க­ளையும் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்க முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.

தமிழ் மக்கள் அர­சுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டாத கார­ணத்தால் அவர்கள் தண்­டிக்­கப்­ப­டு­கின்ற நிலையும் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. இது இன்னும் எவ்­வ­ளவு காலத்­திற்கு தொடரப் போகின்­றது என்­பது கேள்­வி­யாகும்.

வெளிப்படுத்தப்பட்ட அபிலாஷை

பாரிய குறை­பா­டுகள், இன்­னல்­கள், சிக்­க­லான சூழ்­நி­லைகள் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தியில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தல்கள் நடத்­தப்­பட்­டன. இதில் கிழக்கு மாகாண சபைக்­கான தேர்­தலில் தமிழத் தேசியக் கூட்­ட­மைப்­பைச்­சேர்ந்த 11 பேர் தெரி­வா­கி­யி­ருந்­தனர். வட மாகா­ணத்­துக்­கான தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் 29 பேர் தெரி­வா­கி­யி­ருந்­தனர்.

ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யதும் நிரந்­த­ர­மா­ன­து­மான அர­சியல் தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கி­லா­னதும் தமி­ழர்­க­ளுக்­கே­யான சுயாட்சி ஒன்றை நிறு­வு­வ­தற்­கு­மான அபி­லா­ஷை­களை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே வட மாகா­ணத்தில் தமிழ்­மக்கள் சிந்­தித்து இவ்­வாறு வாக்­க­ளித்து தமது தீர்ப்­பினை வழங்­கி­யி­ருக்­கின்­றனர்.

இப்­ப­டி­யி­ருந்தும் எமது மக்கள் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­ப­டா­மையால் நீதி இங்கு இல்­லாது செய்­யப்­ப­டு­கின்­றது. முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவின் பதவி விலக்கு மூலம் இயற்­கையின் நியதி மீறப்­பட்­டி­ருக்­கின்­றது.

எதிர்பார்த்து காத்திருப்பு

யுத்தம் நிறை­வ­டைந்து நான்கு வரு­டங்­களின் பின்னர் வட மாகா­ணத்­துக்­கான தேர்தல் நடத்­தப்­பட்­டது. அதுவும் சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­களின் பின்­ன­ணி­யி­லேயே இந்தத் தேர்தல் இடம்­பெற்­றது. இதன் அடிப்­ப­டையில் சர்­வ­தே­சத்தின் நோக்கு வட மாகா­ணத்தின் மீது சார்ந்­தி­ருக்­கின்­றது.

ஜன­நா­யக ரீதியில் வட மாகாண மக்கள் தமது தீர்ப்­பினை வழங்­கி­யி­ருப்­ப­துடன் தமது விருப்­புக்­க­ளி­னதும். வெறுப்­புக்­க­ளி­னதும் வெளிப்­பாடு எதிர்­கா­லத்தில் எத்­த­கை­யதாய் அமையப் போகின்­றது என்­பது தொடர்பில் எதிர்­பார்த்தும் காத்­தி­ருக்­கின்­றனர்.

அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள 13ஆவது திருத்­தச்­சட்டம் உள்­ள­வாறே அமுல்­ப­டுத்­தப்­ப­டுமா? எழுத்து மூலம் அது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டுமா? ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யதும் நிரந்­த­ர­மா­ன­து­மான தீர்­வினைப் பெற்றுக் கொடுக்­குமா என்­பது தொடர்பில் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர்.

யுத்தம் கார­ணத்தால் பல மில்­லியன் தமிழ் மக்கள் ஏற்­கெ­னவே இங்­கி­ருந்து புலம்­பெ­யர்ந்­து­விட்­டனர். அவர்கள் தற்­போது உலகின் பல்­வேறு நாடு­களில் வாழ்ந்து வரு­கின்­றனர். இந்­நி­லை­யில்தான் தமிழ் மக்­களை இந்­நாட்டில் சம பிர­ஜை­க­ளாக வாழ வைப்­பதை விடுத்து அவர்­க­ளுக்கு இன்­னல்­க­ளையும் இடை­யூ­று­க­ளையும் ஏற்­ப­டுத்தி அவர்­க­ளாகவே நாட்­டை­விட்டு வெளி­யேறிச் செல்லும் நிலை ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது.

அரசு பேசுகிற நல்லிணக்கம்

நல்­லி­ணக்கம் குறித்து அர­சுதான் அதி­க­மாக பேசிக் கொண்­டி­ருக்­கின்­றது. எனினும்இ இந்து – கிறிஸ்­தவம் மற்றும் முஸ்லிம் மதத்­த­லங்கள் எத்­தனை எத்­தனை அழிக்­கப்­பட்­டுள்­ளனஇ சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன என்­பது குறித்து இங்கு சிந்­திக்க வேண்டும். இந்த குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் நேர்­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­னவா? குற்­ற­வா­ளிகள் இனங் காணப்­பட்­டுள்­ள­னரா? என்­பது கேள்­வியே.

அதே­போன்று எதேச்­சா­தி­காரப் போக்கில் செயற்­பட்டு வடக்­கிலும் கிழக்­கிலும் தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் இரா­ணு­வத்­தி­னரின் தேவை­க­ளுக்­கா­கவும் வேறு நோக்­கங்­க­ளுக்­கா­கவும் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இறு­திக்­கட்ட யுத்­தத்தை மனி­தா­பி­மா­னப்­ப­ணி­யாக அர­சாங்கம் வர்­ணித்­தது. இந்த மனி­தா­பி­மான பணி­க­ளின்­போது மனித அழி­வு­களோஇ சேதங்­களோ ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது தான் அர­சாங்­கத்தின் வியாக்­கி­யா­ன­மாகும். அதா­வது இழப்­பு­க­ளற்ற கொள்­கையில் மனி­தா­பி­மானப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

ஆனாலும் யுத்தம் நிறை­வ­டைந்­ததன் பின்னர் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பி­லான பொறுப்­புக்­கூறல் தொடர்பில் வலி­யு­றுத்­தி­யி­ருந்­ததை இங்கு கூற விரும்­பு­கின்றேன். அதே­போன்று 2009 மே மாதம் 23ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட கூட்டு அறிக்­கை­யிலும் இது தொடர்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

போர்க்குற்றம்

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இலங்­கையின் நிலை­வ­ரங்­களை ஆராய்­வ­தற்­கென ஐ.நா. செய­லாளர் நாய­கத்­தினால் நிறு­வப்­பட்­டி­ருந்த குழு­வா­னது தனது அறிக்­கையில் இலங்­கையில் இடம்­பெற்ற இறு­தி்க்­கட்ட யுத்­தத்தில் சர்­வ­தேச சட்­டங்கள், நிய­மங்கள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் அது மீறப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்ள அதே­வேளை போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும் குறித்­து­ரைத்­துள்­ளது. மேலும்இ இவ்­வி­டயம் தொடர்­பிலும் இறு­திக்­கட்ட யுத்­தத்தில் இடம்­பெற்ற அழி­வுகள் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் இங்­கி­லாந்தின் சனல்–4 தொலைக்­காட்சி ஊடகம் ஆவ­ணப்­ப­ட­மாக வெளி­யிட்­டி­ருந்­தது. இத்­த­கைய மனித உரிமை மீறல்­களை அர­சாங்கம் மறுத்­தி­ருக்­கின்ற போதிலும் சனல் – 4 வின் சட்­ட­பூர்­வ­மான இந்த முன்­னெ­டுப்­புக்­களை சர்­வ­தேசம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. எம்­மைப்­பொ­றுத்­த­வரை சனல்–4 ஊடகம் தனது கட­மையை சரி­வர நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது என்­பதை நம்­பு­கின்றோம்.

ஐ.நா.சரிவர செயற்பட்டிருக்கவில்லை

இத்­த­கையோர் யுத்தம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் ஐக்­கிய நாடு­களின் அலு­வ­லர்கள் தங்­க­ளது கட­மை­களை சரி­வர மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதை ஐ.நா.வின் செய­லாளர் நாயகம் கூறி­யுள்ளார்.

இதனை ஆராய்­வ­தற்­கென்று செயலாளர் நாயகம் குழு ஒன்­றையும் நிய­மித்­தி­ருந்­தார். இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது வன்னிப் பரப்­புக்குள் நான்கு இலட்ச மக்கள் சிக்­குண்­டி­ருப்­பதாக நாம் கூறி­யி­ருந்தோம். இருந்தும் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் அங்­கி­ருந்த மக்­களின் எண்­ணிக்கை அர­சாங்­கத்­தினால் குறைத்­துக்­கூ­றப்­பட்­டது. பின்னர் அங்­கி­ருந்து இரண்டு இலட்­சத்து 80 ஆயிரம் மக்கள் இரா­ணுவப் பகு­திக்குள் வந்து இரா­ணு­வத்­திடம் தஞ்­ச­ம­டைந்­தனர். இவர்­களில் புலிகள் இயக்­கத்தைச் சேர்ந்தோரும் இருந்­தி­ருக்­கலாம். இவ்­வாறு எண்­ணிக்கை குறைத்து மதிப்­பீடு செய்­ததன் மூலம் அவர்­க­ளுக்­கான உத­விகள் சென்­ற­டை­யாமை குறித்து இன்று கேள்­வி­யெ­ழுந்­துள்­ளது.

ஐ.நா.தோல்வி

ஐக்­கிய நாடுகள் சபை தனது பணி­களை சரி­யான முறையில் நிறை­வேற்­றி­யி­ருந்தால் இத்­த­கைய மனித அவல பிரச்­சினை இடம்­பெற்­றி­ருக்க வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது. இத­ன­டிப்­ப­டை­யில்தான் இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது சர்­வ­தேச சமூகம் சரி­யான முடி­வு­களை எடுப்­ப­தற்கு தவ­றி­யி­ருந்­த­தாக ஐ.நா. செயலர் கூறி­யுள்ளார். மேலும்இ ஐக்­கிய நாடுகள் சபையின் 62ஆவது அமர்வில் பேசிய ஐ.நா செய­லாளர் நாயகம் இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது தனது பணி­களை மேற்­கொள்­வ­தி­லி­ருந்து ஐ.நா. அலு­வ­லகம் தோல்­வி­ய­டைந்­தி­ருந்­த­தாக கூறி­யி­ருந்தார். இந்த அமர்வில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் கலந்து கொண்­டி­ருந்தார்.

1958, 1561, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்­டு­களின் காலப் பகு­தி­களில் எல்லாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருந்­தன. எனினும் அத்­த­கைய காலப்­ப­கு­தி­களில் இத்­த­கைய தாக்­கு­தல்­களை தமிழ்­மக்கள் எதிர்த்து நிற்­க­வில்லை. 1983 வரை புலிகள் தோற்­றம்­பெ­ற­வில்லை. அதன் பின்­னரே உரு­வாக்­கப்­பட்­டனர்.

பறிப்பதே கொள்கை

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை அழிக்கும் அதே­வேளை தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளையும் பறிப்­ப­துதான் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கொள்கை­யா­க­வி­ருக்­கின்­றதா எனக் கேட்க விரும்­பு­கின்றேன்.

சர்­வ­தேச ரீதி­யான புலி­களின் தொடர்­புகள் தகர்க்­கப்­பட்ட அதே­வேளை ஐரோப்­பிய நாடு­களும் அவ்­வ­மைப்பை தடை செய்­தன. விடு­த­லைப்­பு­லி­களை அழி்ப்­ப­தற்கு சர்­வ­தேசம் இலங்கை அர­சுக்கு பாரிய ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யது. புலிகள் அழிக்­கப்­ப­டு­வ­தற்கு சர்­வ­தேசம் வழங்­கிய ஒத்­து­ழைப்­பா­னது தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற நிரந்­த­ர­மான ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய அர­சியல் ரீதி­யி­லான தீர்­வொன்­றினை தமிழ் மக்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லேயே ஆகும்.

உண்மையை மறைக்கவே

இறு­திக்­கட்ட யுத்­தத்தில் தமிழ் மக்கள் படு கொலை செய்யப்பட்டனர். என்ற உண்­மையை மூடி மறைப்­ப­தற்­கா­கவே முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மக்­களை சந்­திப்­ப­தற்­கான அனு­மதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் சிவில் அமைப்­புக்­க­ளுக்கும் ஊடகங்களுக்கும் மறுக்கப்பட்டிருந்தது. இடம்பெற்ற குற்றச்செயல்களை மூடி மறைக்க முடியாது. இது பாரதூரமான விடயமாகும்.

தமிழ்நாட்டையும் புலம்பெயர் தமிழர்களையும் காரணம் காட்டி பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் சென்றுவிட முடியாது. நல்லிணக்க ஆணைக்குழுவானது தீர்வுகளுக்கான விடயங்களை பரிந்துரை செய்திருந்தது. நாம் அரசாங்கத்துடன் 18 சுற்றுக்களைக் கொண்ட பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றிருந்தோம். பிரிக்கப்படாத இலங்கைக்குள் நிரந்தரமானதும் தமிழ் மக்களால் எற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றுக்கான வரைபினையும் நாம் எழுத்து வடிவில் சமர்ப்பித்திருந்தோம்.

எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அது இடம்பெறவில்லை. இறுதியாக 2012 ஜனவரி மாதம் 17இ 18இ 19ஆம் திகதிகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தமது நிலைப்பாடுகளை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இருந்த போதிலும் அதனை செய்யாது பேச்சுவார்த் தையிலிருந்து அரசு விலகிக் கொண்டது.

அத்துடன் இது தொடர்பில் ஆராய்வ தற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டது. அரசாங் கத்தினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவானது அரசின் கூட்டணிக் கட்சிகளை சார்ந்தது என்ற படியால் அதில் எமக்கு நம்பிக்கை கிடையாது.

மேலும், அரசியல் தீர்வொன்றை வழங்கும் நோக்கில் இக்குழு அமைக்க ப்பட்டிருக்கவில்லை என்பதால் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்வதற்கு தயார் இல்லை என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More