தமிழ் சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் காலமானார் தமிழ் சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் காலமானார்

raghuramதமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது வீடில் இன்று காலை மாரடைப்புக்கு உள்ளானார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ரகுராம் மாஸ்டருக்கு சுஜா, காயத்திரி என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளாகவும் நடன இயக்குனர்களாகவும் உள்ளனர். தமிழ் சினிமாவில் 50 வருட சேவையை நிறைவு செய்ததை கடந்த வருடம் கொண்டாடியுள்ளார்.

இதுவரை தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற சுமார் 1000 திரையிசை பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

பலராலும் பேசப்பட்ட சலங்கை ஒலி, புன்னகை மன்னன் போன்ற திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக இருந்துள்ளார்.

ஆசிரியர்