ஸ்ரீதரன் எம்.பி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை!…ஸ்ரீதரன் எம்.பி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை!…

நாட்டின் அரசியல் சட்டத்தை மீறி தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடாளுமன்றத்தில் புகழந்தமைக்காக   தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் ஸ்ரீதரன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபையில் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

பிரபாகரன் அவர்களைச் சுதந்திரப் போராளியாக வர்ணித்த ஸ்ரீதரன் அவர்களின் உரை மாவீரர் வாரத்தின்போது நிகழ்த்தப்பட்டது.

சட்டத்திலிருந்து தப்பிக்கொள்வதற்காககப் பாராளுமன்ற அங்கத்தவர் என்ற பதவியைப் பயன்படுத்த முடியாது என இலங்கை அரசின் மனித உரிமைச் சிறப்பு முகவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். பிரதிச் சபாநாயகரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்