March 24, 2023 3:14 pm

இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு?இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

boy

சீனாவில் இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியா பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளைப் போலவே இருந்தான்.

பின்னர் படிப்படியான வளர்ச்சியில் 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் பெருத்து காணப்பட்டது. மூச்சுத் திணறலால் குழந்தை கஷ்டப்படவே “பிரைமரி காம்ப்ளக்ஸ்” நோய்தான் என்று பெற்றோர் கருதினர். ஒரு நாள் மூச்சுத் திணறல் அதிகரிக்கவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போதுதான் உண்மை தெரியவந்தது. அவனை முழுமையாக ஸ்கான் செய்து பார்த்த போது அவனது வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த கரு பின்னர் வயிற்றுக்குள் கட்டி போல வளரத் தொடங்கியவுடன் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.

இது குறித்து மருத்துவர் தெரிவிக்கும் போது குழந்தையின் தாய் கருவுறும் போது இரட்டை குழந்தைகளுக்கான கருவுறல் நடந்துள்ளது. ஆனால் தவறுதலாக ஒரு கரு முட்டை இவனது வயிற்றுக்குள் சென்று வளர்ச்சியடையாமல் ஒரு கட்டத்தில் நின்றுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்