வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்

நிவாரணம் இல்லாத வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று அகில இலங்கை கமநல சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத்திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு – செலவுத்திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ‘விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயதை  60 இல் இருந்து 63 ஆக அதிகரித்தமையை உடனடியாக இரத்துச் செய்”, ‘ விவசாயிகளின்  நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு” போன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

ஆசிரியர்