தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம்தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம்

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியும்  தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95)  ஜோஹனஸ்பெர்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அமைதியாக இறந்தார் என்று தற்போதைய ஜனாதி பதிஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் சூழ்ந்திருக்கையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்