டயானாவின் ஆடை 850,000 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம்டயானாவின் ஆடை 850,000 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம்

பிரிட்டிஷ் இளவரசி டயானாவுக்கு விருப்பமான உடை 850,000 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ்ன் முதல் மனைவி, டயானா பரிசில் நடந்த கார் விபத்தில் 1997ல் உயிரிழந்தார். இவர் அணிந்திருந்த ஆடைகள், அவ்வப்போது ஏலம் விடப்பட்டு, அந்த நிதி, தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

 

அவர் அணிந்த விலை உயர்ந்த ஆடை, லண்டனில் உள்ள, கேரி டெய்லர்’ ஏல விற்பனை நிறுவனத்தில், கடந்த வாரம், ஏலத்தில் விடப்பட்டது. கடந்த, 1986ம் ஆண்டு, செஞ்சிலுவை சங்க நிதி திரட்டும் நிகழ்ச்சியில், பங்கேற்ற டயானா, இந்த ஆடையை அணிந்திருந்தார்.தரை வரை நீண்டிருக்கும் இந்த ஆடை, தங்கத்தாலான நட்சத்திரங்கள், ரத்தின கற்கள் மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொருத்தமான கையுறையும், ஹெட்பாண்டும், ஏலம் விடப்பட்டன.

 

இந்த வெண்ணிற ஆடையை விருப்பப்பட்டு வாங்கிய டயானா, மூன்று முறை மட்டுமே அணிந்துள்ளார். அந்த ஆடையை 850,000 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்