லண்டனில் மருதநிலா நிகழ்வில் முக்கிய வரலாற்று நூல் வெளியீடு லண்டனில் மருதநிலா நிகழ்வில் முக்கிய வரலாற்று நூல் வெளியீடு

பிரித்தானிய ஆட்சியின்போது வெளிவந்த வன்னி மாவட்டங்களின் விபரங்கள் அடங்கிய நூலான மனுவல் ஒப் வன்னி தற்போது “இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு” என தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகின்றது.

பிரித்தானியாவில் இயங்கும் வன்னி நலன்புரிச் சங்கம் வருடம்தோறும் நடாத்தும் மருதநிலா நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்பிளியில் நடைபெற இருக்கின்றது. மேற்படி நிகழ்வினில் இந்த நூல் வெளியிடப்பட இருக்கின்றது.

வன்னி தமிழாக்கக் குழு இவ் நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளது. முல்லைத்தீவு வற்றாப்பள்ள அம்மன் கோவில் நிதியில் நூலாக்கம் பெற்ற இந்த நூல் தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என தமிழாக்கக் குழு எதிர்பார்க்கின்றது.

w2

w1

ஆசிரியர்