நாய் வளர்ப்புக்கு வரி: இலங்கை அரசு புதிய திட்டம்நாய் வளர்ப்புக்கு வரி: இலங்கை அரசு புதிய திட்டம்

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின்போது நாய் வளர்க்க வரி விதிக்கப்பட்டதைப் போல் மீண்டும் அந்தத் திட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்பு நகராட்சி தலைமை கால்நடை அதிகாரி தர்மவர்த்தனே கூறியது:

கொழும்பு நகரில் 15 ஆயிரம் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், நாய்க் கடியினால் ஏற்படும் ரேபீஸ் உள்ளிட்ட பல நோய்களைத் தவிர்க்கும் விதமாகவும் நாய் வளர்ப்பதற்கு உரிமம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இலங்கை இருந்த போது நாய் வளர்க்க வரி விதிக்கப்பட்டது. அதே போல் நாய் வளர்க்க வரி விதிக்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பெண் நாய்களுக்கு ரூ. 7.50ம், ஆண் நாய்களுக்கு ரூ. 5ம் வரி விதிக்கப்படவுள்ளது என்றார்.

ஆசிரியர்