யாழில் பெண்களுக்கெதிரான வன்முறையை கட்டுப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு பேரணியாழில் பெண்களுக்கெதிரான வன்முறையை கட்டுப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு பேரணி

வடக்கு கிழக்கில் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும்  வன்முறைகளைக் கட்டுப்படுத்தக்கோரி  பெண்கள் அமைப்பினால் இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று  முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.நீதிமன்றத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் இரண்டு மருங்கிலும் பெருமளவில் ஒன்று கூடிய பெண்கள் எதிர்ப்பு பதாகைகளையும் தாங்கியவாறு நின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கட்டுபடுத்த கோரியே இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர்