இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே | நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே | நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்

pt

கடந்த  சில நாட்களாக ஜெர்மனியின் பெரிமனில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரனையின் இறுதியில் 2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே அறிவித்துள்ளது. மேலும் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை மிகப்பெரிய அளவில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human Rights Association) மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

மக்கள் தீர்ப்பாயத்தின் இவ் அறிக்கையினால் இலங்கை அரசு இன்னுமொரு தலையிடியை சந்திக்க தயாராகின்றது. மேலும் இத் தீர்மானத்தின் அறிக்கையை சர்வதேச அமைப்புகளுக்கு  அனுப்பி வைக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

 

ஆசிரியர்