சிவில் ஆளுநரை உடன் நியமிக்கவும் | அமைச்சர் திஸ்ஸ விதாரணசிவில் ஆளுநரை உடன் நியமிக்கவும் | அமைச்சர் திஸ்ஸ விதாரண

“வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை விரைவில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். எமது நிலைப்பாடும் இதுவே” என்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார் சிரேஷ்ட அமைச்சரும் சமசமாஜக் கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண.   “தமிழர்களின் விருப்பத்தைப் போன்றே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் விரைவில் அமுல்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ முன்வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

வடமாகாண சபையில் இராணுவ ஆளுநரை உடனடியாக பதிவியிலிருந்து நீக்கி அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:   “வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சமசமாஜக் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உரிமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்கே இருக்கின்றது.    அவர் தான் வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து இராணுவ ஆளுநரைப் பதிவியிலிருந்து நீக்கி சிவில் ஆளுநரை நியமிக்க முன்வர வேண்டும்.

வடக்கைப் பொறுத்த மட்டில் சிவில் ஆளுநர் ஒருவரே சிறந்தவராவார். எமது நிலைப்பாடும் இதுவே.   அப்போதுதான் அங்குள்ள வர்களின் சுதந்திரமும் நிம்மதியும் பூரணமாக்கப்படும். இதை ஜனாதிபதி புரிந்து செயற்பட வேண்டும். ஆகவே மிக விரைவில் வடக்கில் சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்” என்றார். மிக விரைவில் வடக்கில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்