Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை அரசு சார்பில் 8 ஆவணப்படங்கள் ஐ நா வுக்கு அனுப்பப்படும் | இராணுவ பேச்சாளர் இலங்கை அரசு சார்பில் 8 ஆவணப்படங்கள் ஐ நா வுக்கு அனுப்பப்படும் | இராணுவ பேச்சாளர்

இலங்கை அரசு சார்பில் 8 ஆவணப்படங்கள் ஐ நா வுக்கு அனுப்பப்படும் | இராணுவ பேச்சாளர் இலங்கை அரசு சார்பில் 8 ஆவணப்படங்கள் ஐ நா வுக்கு அனுப்பப்படும் | இராணுவ பேச்சாளர்

1 minutes read

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் சபை அமர்­விற்கு முன்னர் இலங்­கையின் உண்மை நிலை பற்­றிய எட்டு வீடியோ காணொ­ளி­களை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கு அனுப்­ப­வுள்ளோம் என  இரா­ணுவப் பேச்­சாளர் ருவான் வணிக சூரிய தெரி­வித்­துள்ளார்.

யுத்த கால கட்­டத்தில் இலங்­கையில் நடந்­தவை என்­ன­வென்­பதை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு அறிந்து கொள்ள வேண்டும். உலகின் நடு­நி­லை­யான ஒன்­றியம் பக்­கச்­சார்­பாக நடந்து கொள்­ளக்­கூ­டா­தென மேலும் அவர் தெரி­வித்தார்.

இவ் ஒளி­நா­டாக்கள் யுத்­தத்­திற்கு முன்­னரும் யுத்­தத்தின் பின்­னரும் இலங்­கையில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் சர்­வ­தே­சத்தின் மத்­தியில் புரிந்­து­ணர்­வொன்­றினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்­புக்கள் உள்­ளன.

யுத்த குற்­றங்கள் இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் இடம்­பெ­ற­வில்லை என்­ப­தற்கு எம்­மிடம் பல ஆதா­ரங்கள் உள்­ளன. அவற்­றினை அடிப்­ப­டை­யாக வைத்தே அவ் எட்டு வீடியோ காணொ­ளி­க­ளையும் தயா­ரிக்­கின்றோம். இதில் உண்­மையே அடங்­கி­யுள்­ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி ஆவணப்படங்களை இராணுவமே தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More