ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது கொலைவெறி தாக்குதல் | இரு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பலிஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது கொலைவெறி தாக்குதல் | இரு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பலி

முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினருக்கிடையிலான குலப்பகை ஈராக்கில் தலைவிரித்து தாண்டவமாடி வருகிறது. இதன் எதிரொலியாக இரு பிரிவினரும் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பான்மை சமுதாயத்தினர் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக ஏராளமான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் பலியாகி வருவது ஈராக்கில் தொடர்கதையாகிவிட்டது.

இந்த தொடர்கதையின் புதிய அத்தியாயமாக ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ரஷித் பகுதியில் ஷியா யத்ரீகர்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 22  ஷியா யாத்திரீகர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதேபோல், மொசுல் நகரத்தில் ஷியா யத்திரீகர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிகளால் சுட்ட சன்னி பிரிவினர் 12 பேரை சுட்டுக் கொன்றனர். 5 கார்களின் மீது நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திர்கித் நகரில் உள்ள உள்ளாட்சி துறை அலுவலகத்தின் மீது கார் குண்டு தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றிக் கொண்ட சிலர், உள்ளே இருந்த 40 பணியாளர்களையும் சிறை பிடித்தனர். அவர்களை விடுவிக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

திர்கித் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 3 பொலிசாரும் கிர்குக் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 2 பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சலாஹெதீன் மாகாணத்தில் உள்ள பைஜி பொலிஸ் நிலையத்தை கைப்பற்றிக் கொண்ட தீவிரவாதிகள் உள்ளே பணியில் இருந்த 2 பொலிசாரை சுட்டுக் கொன்றனர்.

பின்னர், விரைந்து வந்த அதிரடிப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பொலிசார் உள்பட 6 பேர் பலியாகினர்.

ss

ded

ஆசிரியர்