புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும் | கோத்தபாய அழைப்புபுலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும் | கோத்தபாய அழைப்பு

கொழும்பில் நேற்று நடை­பெற்ற இலங்­கையில் பணி­யாற்­றுங்கள் எனும் தொனிப்­பொ­ருளில் அமைந்த மாநாட்டில் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில்,

இலங்­கையில் வாழ்­வ­தற்கும் பணி­யாற்­று­வ­தற்­கு­மென அறி­வார்ந்த பணி­யா­ளர்கள் மற்றும் ஏனைய தொழில்சார் நிபு­ணர்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய சூழ­லொன்றை உரு­வாக்­கு­வதில் அர­சாங்கம் மிகவும் ஆர்வம் காட்­டி­வ­ரு­வ­தாகத் தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசு­கையில், கடந்த 1980 களில் தொடங்கி 2009 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் நாட்டில் தோன்­றி­யி­ருந்த நிச்­ச­ய­மற்ற சூழ்­நிலை கார­ண­மாக எமது புத்­தி­ஜீ­வி­களில் பலர் நிம்­ம­தி­யான வாழ்க்கை வச­தி­களைத் தேடி ஏனைய நாடு­க­ளுக்குச் சென்­றி­ருந்­தனர். இத்­த­கைய தனி­ந­பர்கள் யுத்த சூழ்­நி­லை­யி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்­ளவோ, உயர்­கல்­வியைப் பெற்­றுக்­கொள்­ளவோ, அதிக பண­வ­ரு­மானம் ஈட்­டித்­த­ர­வல்ல வேலை வாய்ப்பு வச­தியைப் பெற்­றுக்­கொள்­ளவோ அல்­லது சிறந்த வாழ்க்கைத் தர­மொன்றை அனு­ப­விக்­கவோ சென்­றி­ருந்­தாலும், அவர்­களின் புறப்­பாடு உண்­மை­யி­லேயே நாட்­டிற்குப் பார­தூ­ர­மா­னதோர் இழப்­பாகும்.

எமது நாடு கடந்த காலங்­களில் முகம் கொடுத்­தி­ருந்த பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு, தற்­போது துரித சம­வி­கித வளர்ச்­சிக்­கான பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருப்­ப­தனால், தங்கள் தாய்­நாட்­டிற்குத் திரும்­பி­வ­ரு­வ­தென வெளி­நா­டு­களில் வாழ்ந்­து­வரும் அனைத்துச் சமூ­கங்­க­ளையும் சேர்ந்த இலங்­கை­யர்கள் கருத்­திற்­கொள்ள வேண்­டிய காலம் தற்­போது கனிந்­துள்­ளது.

கடந்த ஒரு சில தசாப்­தங்­க­ளாக கொழும்பு மாந­கரின் சேதன வளர்ச்சி கார­ண­மாக அது எதிர்­நோக்கி வந்­துள்ள பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கென அண்­மைக்­கா­ல­மாக ஏரா­ள­மான பணிகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. அர­சாங்கம் தனது நிரு­வாக செயற்­பா­டு­களை ஸ்ரீ ஜெய­வர்த்­ன­புர பிர­தே­சத்­திற்கு மாற்­றி­வ­ரு­வதால் உல­கத்­த­ரம்­வாய்ந்த பொரு­ளா­தார மைய­மொன்­றாக வளர்ச்­சி­ய­டையத் தக்க வகையில் கொழும்பு அதி­க­ள­வி­லான இட­வ­ச­தியைக் கொண்­ட­தாக விளங்­க­வுள்­ளது.

கால்வாய் வலை­ய­மைப்பு, வடி­கா­ல­மைப்பு மற்றும் சாக்­கடை அகற்றல் முறை­மைகள் போன்ற பாரி­ய­ளவில் உதா­சீனம் செய்­யப்­பட்­டி­ருந்த பழைய உட்­கட்­ட­மைப்பு வச­திகள் தற்­போது வளர்ச்சி கண்­டு­வ­ரு­கின்­றன. நீர் வழங்கல் மற்றும் மின்­சார விநி­யோகம் ஆகி­ய­வற்­றி­லான வினைத்­தி­றனை அதி­க­ரிக்­கவும் முன்­னேற்­ற­வு­மென திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அண்­மைக்­கா­ல­மாக கணி­ச­மான அள­வி­லான கவ­னத்தை ஈர்த்­துள்ள இன்­னு­மொரு முன்­னேற்­றத்­து­றை­யாக மாந­கர திண்மக் கழி­வுப்­பொருள் முகா­மைத்­துவம் அமைந்­துள்­ளது. நீண்­ட­கால தவ­ணை­மு­றையில் இந்தப் பிரச்­சி­னையை எவ்­வாறு வெற்­றி­க­ர­மாகக் கையாள்­வ­தென்­பது குறித்து தற்­போது ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

ஆசிரியர்