புது வருடப் பிறப்புடன் சீனிப் பாவனையை அரைவாசியாகக் குறைத்து தொடர்ந்தும் அதனைப் பேணி வரவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து தேக்கரண்டிளவு சீனிப் பாவனையை மட்டுப்படுத்த முடியுமாயின் அது உடல் நலத்திற்கு மிக்க பயன் உடையதாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
பொதுவாக 10 தேக்கரண்டியளவு பாவணையில் இருப்பதாகவும் அதுவும் அதிகமெனத் தெரிவித்துள்ளது. ஏனெனில் அதிகரித்த சீனப் பாவனை காரணமாக நீரிழிவு நோய்,இருதயக் கோளாறுகள், அதிக உடற் பருமன், பற்கள் சிதைவடைதல் முதலான பல நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கல்விப் பிரிவொன்றின் தலைவர் பிலிப் ஜேம்ஸ் வெளியிட்ட தகவல் ஒன்றின் படி ஒருநாளைக்கு சராசரியாக ஒருவர் 46 கரண்டிகளுக்கு மேல் சீனிப்பாவனையுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளதாக ஒரு இணையச் செய்தி தெரிவிக்கின்றது. இது கைத் தொழில் நாடுகளில் பரவலாகக் காணப் படும் ஒரு பிரச்சினையாகும்.