வெற்றிகரமாக முடிந்தது சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் சோதனை (படங்கள் இணைப்பு )வெற்றிகரமாக முடிந்தது சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் சோதனை (படங்கள் இணைப்பு )

சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் அதன் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது.  உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர் கப்பல், கடந்த ஆண்டு, சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய சீன தென்கடல் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இச்சோதனை ஓட்டத்தில் போர் அமைபுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  சீனாவின் இந்த செயல் சீன கடல் எல்லையை சுற்றியுள்ள நாடுகளுக்கு, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

எனினும், “எந்த நாட்டையும் மிரட்டுவதற்கான முயற்சி அல்ல. இது, சீனாவின் சாதாரண கடற்படை சோதனை நடவடிக்கையே’ என, சீன கடற்படை அதிகாரி தெரிவித்தார்.

Naval honour guards stand as they wait for a review on China's aircraft carrier

chi2

chi5

ஆசிரியர்