குழந்தைகள் கடத்தல் கும்பலின் மூளையாக இருந்த சீனப் பெண் மருத்துவர்குழந்தைகள் கடத்தல் கும்பலின் மூளையாக இருந்த சீனப் பெண் மருத்துவர்

குழந்தைகளை கடத்திச் சென்று விற்கும் கும்பலைச் சேர்ந்த சீன பெண் மருத்துவர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2006ஆம் ஆண்டில் இருந்து அவர் பணியாற்றிய மருத்துவமனையில் இருந்து சுமார் 55 குழந்தைகளை கடத்தி, பிறகு அதனை விற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பலை எளிதாக பிடித்து விடலாம் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் பெற்றோரிடும், பிறந்த குழந்தைக்கு மிகக் கொடிய நோய் இருப்பதாகவும், இவர்கள் இயல்பாக வாழ இயலாது என்றும் கூறி, அவர்களிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு, அதனை கடத்திச் சென்று விற்பனை செய்து வந்தது தற்போது அம்பலாமாகியுள்ளது.

ஆசிரியர்