பாம்புக்கு வைத்த தீயால் வீடு நாசம்பாம்புக்கு வைத்த தீயால் வீடு நாசம்

அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் வீடொன்றினுள் புகுந்த பாம்பு ஒன்று அவ்வீட்டை தீக்கிரையாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், டெகஸாஸ் மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாம்பொன்று வீட்டினுள் புகுந்ததை கண்ட பெண்ணொருவர் அப்பாம்பின் மீது பெற்றோலை ஊற்றியுள்ளார். அத்துடன் தனது மகனை அப் பாம்பைக் கொல்வதற்காக அழைத்துள்ளார்.

பெற்றோலுடன் ஓடிய பாம்பைக் கண்ட மகனுக்கு அப் பாம்பினைக் கொழுத்தும் ஆசை எழுந்துள்ளது. அதனை அவர் ஒரு தீக்குச்சியின் ஊடாகச் செய்துள்ளார். பாம்பின் மீது தீபற்றியதும் அப் பாம்பு வீட்டிற்கருகில்சேர்த்து வைக்கப்பட்டிருந்து குப்பைக் குவியலுக்குள் புகுந்து அக் குப்பைக் குவியலுக்கும் தீயைத் தாரைவார்த்துள்ளது. குவியலில் பற்றிய தீ வீட்டிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து அப்பெண் உடனடியாக அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தீயணைப்பு உதவியைக் கோரியுள்ளார். எனினும் தீயணைப்பு உதவி வந்து சேர்ந்த போது வீடு சாம்பாலாகியிருந்தது.

 

snake23n-1-web-450x269

ஆசிரியர்